மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி.. ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இந்துசமய அறநிலையத்துறை மண்டல அலுவலகம் ரூ.59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

Sep 3, 2024 - 12:34
 0

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக மேற்கு சித்திரை வீதியில் இருந்த இடத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர் அலுவலகம் இயங்கி வந்தது. இடப்பற்றாக்குறை காரணமாக 2017 ஆகஸ்ட் மாதத்தில் இந்த கட்டிடம் காலி செய்யப்பட்ட போது ரூ.59 ஆயிரம் வாடகை பாக்கி இருந்துள்ளது. அதன் பின்னர், அந்த அலுவலகம் எல்லீஸ் நகரில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் 2017 ஆகஸ்ட் முதல் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் வாடகை பாக்கி நிலவரங்கள் குறித்து மதுரையை சேர்ந்த தினகரன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.  அதற்கு பதிலளித்துள்ள கோவில் நிர்வாகம், 2024 மே மாதம் வரை மொத்தம் 59 லட்சத்து 6 ஆயிரத்து 813 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow