ஆட்சியின் மீது காழ்ப்புணர்ச்சி.. எச்சரிக்கும் செல்வப்பெருந்தகை..இந்தியா கூட்டணி வலிமையாம்!

Congress Leader Selvaperunthagai About VCK Thirumavalavan Manadu : சில சமூக விரோதிகள் இந்த ஆட்சியின் மீது காழ்ப்பு உள்ளவர்கள் கலவரத்தை ஏற்படுத்துவதற்கும், பிரச்சனையை ஏற்படுத்துவதற்கும் முயற்சி செய்வார்கள் என்று தெரியும். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என தான் ராமநாதபுரம் காவல்துறைக்கு சொல்லி விட்டு வந்தோம் என்று செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.

Sep 12, 2024 - 15:33
Sep 12, 2024 - 15:55
 0
ஆட்சியின் மீது காழ்ப்புணர்ச்சி.. எச்சரிக்கும் செல்வப்பெருந்தகை..இந்தியா கூட்டணி வலிமையாம்!
Congress Leader Selvaperunthagai About VCK Thirumavalavan Manadu

Congress Leader Selvaperunthagai About VCK Thirumavalavan Manadu : கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. 2026ம் ஆண்டு தேர்தலை சந்தித்து,  கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை பெரும். இந்தியா கூட்டணியில் ஒரு சலசலப்பு இல்லை.

சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை. வேளாண் திருத்தச்சட்ட போராட்டத்தின் போது யாரெல்லாம் டர்பன் வைத்திருந்தார்களோ, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா, இல்லையா? அதைத்தான் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். செய்திகளில் வந்ததை அவர் பதிவு செய்திருக்கிறார்.

பிரதமர் விநாயகர் பூஜைக்கு சென்றதை போல், மசூதி, தர்கா, கிருத்துவ பேராலயங்கள், சீக்கியர்கள் நடத்தும் பொற்கோவில்களுக்கு செல்ல வேண்டும். இப்படி எல்லா இடத்திற்கும் சென்றால், தேசத்திற்கான பிரதமராக இருப்பார். ஒரு சில நபருக்காக மட்டும் போவது, இந்த தேசத்தின் ஒற்றுமையை வலிமைப்படுத்தாது.

மதுரை, சிவகங்கை மாவட்ட காவல்துறை சிறப்பாக பணியாற்றியது. ஆனால் ராமநாதபுரத்தில் அச்சுறுத்தல் இருந்தது. எங்களுடைய கூட்டணி ஆட்சி நடக்கிறது. அந்த பொறுப்பும், கடமை உணர்வும் எடுத்துரைப்பது எங்களுடைய காலத்தின் கட்டாயம், உரிமை. அந்த அடிப்படையில் தான் ராமநாதபுரம் காவல்துறைக்கு நான் சில தேவைகள் இருக்கிறது. இதில் கவனம் செலுத்த வேண்டும் என சொல்லினேன். நான் சொல்லி இரண்டு மணி நேரத்தில் கலவரம் ஏற்பட்டது. இதைத்தான் நாங்கள் எச்சரிக்கை செய்தோம். 

சில சமூக விரோதிகள் இந்த ஆட்சியின் மீது காழ்ப்பு உள்ளவர்கள் கலவரத்தை ஏற்படுத்துவதற்கும், பிரச்சனையை ஏற்படுத்துவதற்கும் முயற்சி செய்வார்கள் என்று தெரியும். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என தான் ராமநாதபுரம் காவல்துறைக்கு சொல்லி விட்டு வந்தோம்.

கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. 2026ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து, கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை பெரும். இந்தியா கூட்டணியில் ஒரு சலசலப்பு இல்லை. ஒரு கருத்து சொல்லக்கூடாது என்றால் என்ன அநியாயம்? விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு மாநாடு நடத்துகிறது. அவர்களுக்கு உரிமை இருக்கிறது யாரை அழைக்க வேண்டும் என்று. இதனால் இந்தியா கூட்டணியில் சலசலப்பு வருமா? என்றும் கேட்டுள்ளார் செல்வ பெருந்தகை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow