இந்துக்கள் வன்முறையாளர்களா?..ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கொந்தளித்த மோடி, அமித்ஷா

டெல்லி: பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று ராகுல் காந்தி கூறியதால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. ராகுல் உரைக்கு எதிர்ப்பு தெரிவிர்த்து பாஜகவினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.ராகுலின் பேச்சு இந்து சமூகம் மீதான தாக்குதல். இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல்காந்தி முயற்சிக்கிறார்” என்றும் கண்டனம் தெரிவித்தார்.

Jul 1, 2024 - 16:35
Jul 2, 2024 - 12:06
 0
இந்துக்கள் வன்முறையாளர்களா?..ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கொந்தளித்த மோடி, அமித்ஷா
Rahul Gandhi Should Apologize Says PM Modi in Lok Sabha Session 2024

லோக்சபாவில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி மணிப்பூர் பற்றி பேசினார் அப்போது அவர், பிரதமர் மோடி மணிப்பூர் மாநில பிரச்சனை பற்றி பேசுவதும் இல்லை. மணிப்பூருக்கு செல்லவும் இல்லை. மணிப்பூர் மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதா? மணிப்பூரில் உள்நாட்டு யுத்தம் நடக்கவில்லையா?


எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமே அல்ல. சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பதே வன்முறையின் சின்னம் அல்ல. மாறாக அகிம்சையின் சின்னம். பிரதமர் மோடிதான் கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறர்; கடவுளுடன் நேருக்கு நேர் பேசிக் கொண்டிருக்கிறார்.


பிரதமர் மோடி கடவுளின் அவதாரம். மகாத்மா காந்தியை ஆவணப் படம் மூலமே உலகம் அறிந்ததாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மோடி வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் மகாத்மா காந்தியடிகளை அறிந்திருக்கலாம். ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்?

நான் இயல்பாக பிறந்தவர் இல்லை. கடவுளால் அவதரிக்கப்பட்டவன்'' என்று மோடி கூறியுள்ளார். நாங்கள் இதை கூறவில்லை. பிரதமர் தான் கூறி இருக்கிறார். அப்படி என்றால் இவர் கடவுளிடம் பேசிய பின்னர்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா? மத்திய அரசின் கொள்கையால் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் செல்லாதது ஏன்?'' என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பாஜக அரசின் கொள்கைகளால்தான் மணிப்பூரில் வன்முறைகள் வெடித்தன. மணிப்பூர் வன்முறைக்கு மத்திய அரசுதான் காரணம். மணிப்பூரில் உள்நாட்டு யுத்தம் நடப்பதற்கு மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம். பாஜகவின் அரசியல்தான் காரணம் என்றார் ராகுல்காந்தி. 
பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று ராகுல் காந்தி கூறியதால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. ராகுல் உரைக்கு எதிர்ப்பு தெரிவிர்த்து பாஜகவினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்

அவரது பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார்.அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறதோ அதற்கேற்ப ஆட்சி நடத்துகிறேன்.  இந்து மதத்தினரையும் வன்முறையாளர்கள் என்று கூறுவது மிகவும் சீரியசானது'' என்றார். ராகுலின் பேச்சு இந்து சமூகம் மீதான தாக்குதல். இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்தார். 

ராகுல்காந்தியோ, ‘மோடி இந்துக்களின் பிரதிநிதி அல்ல’ என்றார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் ராகுலின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தினார். இதனையடுத்து அவையில் கூச்சம், குழப்பம் ஏற்பட்டது.தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow