சோ ராமசாமி மனைவி சௌந்தரா ராமசாமி மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி காலமானார். வயது மூப்பு உடல் நலக்குறைவு காரணமாக 84 வயதில் காலமானதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

Aug 20, 2024 - 13:07
Aug 20, 2024 - 16:08
 0
சோ ராமசாமி மனைவி சௌந்தரா ராமசாமி மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
cho ramaswamy wife soundaramba ramaswamy passed away

மறைந்த நடிகரும் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான சோ ராமசாமி அவர்களின் மனைவி சௌந்தரா ராமசாமி காலமானார். 84 வயதான சௌந்தரா ராமசாமி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சீனிவாச அய்யர் ராமசாமி என்பதே சோ அவர்களின் முழு நிஜப்பெயர். பகீரதன் என்பவர் எழுதிய தேன்மொழியாள் எனும் நாடகத்தில் சோ எனும் நாடகத்தில் நடித்து புகழ் பெற்றதால், இவரை சோ என்று அனைவரும் அழைக்க துவங்கினர். திரைத்துறை, பத்திரிக்கை துறையிலும் சோ புகழ் பெற்று விளங்கினார். 

1966ம் ஆண்டு சௌந்தராம்பா எனும் பெண்ணை சோ ராமசாமி திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஸ்ரீராம் மற்றும் சிந்துஜா என இரு பிள்ளைகள். துக்ளக் எனும் அரசியல் இதழை சோ ராமசாமி 1970 தை மாதம் முதல் நாள் துவங்கினார். அன்றில் இருந்து இறக்கும் அவரை அந்த இதழின் ஆசிரியர் பொறுப்பில் சோ அவர்கள் பதவி வகித்து வந்தார்.

தனது அரசியல் இதழில் சோ அவர்கள் விமர்சிக்காத அரசியல் தலைவர்களே இல்லை. இந்திரா காந்தி, கருணாநிதி, ஜி.கே. மூப்பனார், எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர்., வாஜ்பாய், அத்வானி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என பலரை தனது ஆசிரியர் பக்கத்தில் நேரடியாக தாக்கி கட்டுரைகள் எழுதி உள்ளார் சோ ராமசாமி.

கருணாநிதி, எம்ஜிஆர் என இருவரையும் டார்கெட் செய்து விமர்சித்தவர் சோ ராமசாமி.  அதிமுகவின் பொது செயலாளராக இருந்து ஜெயலலிதா கட்சியை நடத்தி வந்த போது பெரிதாக கட்சியின் அடிப்படை கொள்கை பற்றி ஏதும் விமர்சிக்கவில்லை.ஜெயலலிதா தனது பிறந்தநாளுக்கு சோ ராமசாமி, சௌந்தராம்பா ராமசாமியிடம் நேரில் சென்று ஆசி பெற்றிருக்கிறார். யாரிடமும் எதற்காகவும் தலை வணங்காத ஜெயலலிதா தலை குனிந்து ஆசி பெற்றது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது. 

திரைக்கதை எழுத்தாளர், நாடக எழுத்தாளர், இயக்குனர், நடிகர், அரசியல், இதழ் ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் சோ ராமசாமி. இவரை தனது ராஜகுரு என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதய முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் 7ம் தேதி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். 

சோ ராமசாமி கடந்த 2016 இல் காலமான நிலையில் சென்னையில் தனது குடும்பத்துடன் சௌந்தராம்பா ராமசாமி  வசித்து வந்தார். 84 வயதான சௌந்தரா ராமசாமி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.நாளை முற்பகலில் சௌந்தரா ராமசாமி உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

துக்ளக் நிறுவனரும் மறைந்த மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமியின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “துக்ளக் நிறுவனரும் – அப்பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சோ அவர்கள் தனது வாழ்நாளில் பத்திரிகை உலகிலும், திரைத்துறை மற்றும் பொது வாழ்விலும் தனி முத்திரை பதித்ததற்கு உற்ற துணையாக இருந்த சௌந்தரா ராமசாமி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow