விஜய் தெரியும், மு.க.ஸ்டாலின்னா யாரு?.. பதக்கம் வென்ற வீராங்கனை கொடுத்த பதில்
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை தெரியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெரியாது என ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை தெரியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெரியாது என ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸில் நடைபெற்றது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்த ஒலிம்பிக்ஸில் தான் வீரர்களும், வீராங்கனைகளும் சம அளவில் பங்கேற்றனர். அதாவது ஆண்கள் 5250 பேரும், 5250 பெண்களும் பங்கேற்றனர். ஒலிம்பிக்கில் முதல்முறையாக பெண் போட்டியாளர்கள் அனுமதிக்கப்பட்டதும் இதே பாரிஸில் நடந்த ஒலிம்பிக்ஸில் தான்.
அந்த வகையில இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 13 நபர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 122 பேர் பங்கேற்று, 7 பதக்கங்களை வென்றிருந்தது இந்திய. இம்முறை பாரிஸில் நடந்த 6 பதக்கங்களை வென்றது இந்தியா.
இந்த ஒலிம்பிக்கில் 10மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துக்கொண்ட இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்களை வென்றிருந்து. பாரிஸ்-ல் இருந்து நாடு திரும்பிய இவருக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் இவருக்கென பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற வீராங்கனை மனு பாக்கருக்கு பரிசாக துப்பாக்கியும் வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் அவரை பாராட்டும் விதமாக அவருக்கு மாலை அணிவித்து கிரீடத்தை சூட்டி மகிழ்ந்தனர்.
இதனையடுத்து மாணவர்களோடு உரையாடினார் மனு பாக்கர். அப்போது மாணவர் ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரியுமா என கேள்வி எழுப்ப, அவரை தெரியாது, பிரக்ஞானந்தா மற்றும் நடிகர் விஜய்யை தெரியும் என பதிலளித்துள்ளார் மனு பாக்கர். இவர் இவ்வாறு பதிலளிப்பார் என சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்தியாவில் உள்ள சில பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை எனவும், பள்ளிகளில் விளையாட்டு ஊக்குவிக்கப்பட்டால் இந்தியா இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் மனு பாக்கர். மேலும், வீராங்கனை வினேஷ் போகத் பற்றி பேசிய அவர், ”வினேஷ் போகத்தை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன்; எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர் அவர்” என நெகிழ்ச்சியுடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு இயக்குனர் நெல்சனின் மனைவி அடைக்கலம்? - போலீசார் விசாரணை
தமிழ்நாட்டை சேர்ந்தவராக இல்லாவிட்டாலும், உலகளவில் பிரபலமானவராக இருக்கும் மனு பாக்கருக்கே நடிகர் விஜய்யை தெரியும் என்றால் நடிகர் விஜய் உண்மையிலேயே மாஸ்தான் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?