“சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா” - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“இந்திய சீன உறவு சீனாவின் பார்வையில் இருந்து” என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.இயக்குநர் காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

Sep 10, 2024 - 20:43
Sep 11, 2024 - 09:47
 0
“சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா” - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
“சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா” - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இதில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக சீனவும் அதன் எல்லை விரிவாக்க கொள்ளைகையும் இருந்தது. சீனா தொடந்து இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்தது. அதன் விளைவாக 5500 சதுர கிலோமீட்டர் பகுதியை சீனா அக்ஷ்யசின் பகுதியை கைப்பற்றியது. அப்போது இருந்த தலைவர்கள் அகிம்சை பற்றியே பேசிக்கொண்டு இருந்ததால் நாம் மிக பெரிய விலையை கொடுக்க நேரிட்டது. அது மட்டும் இல்லாமல் சீனா பாகிஸ்தானை நமக்கு  எதிராக வளர்க்க ஆரம்பித்து அது நமது எல்லை மட்டுமின்றி பல இடங்களில் பிரச்சினையாக மாறியது. தற்போது 10 ஆண்டுகால புதிய ஆட்சியால் இந்த நிலை மாறி உள்ளது. அட்டல் குகை மற்றும் பல சாலைகள் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் ஆகியவற்றை  எல்லை பகுதியில் அமைத்து உள்ளோம். அந்த பகுதியில் அதனால் நிலைமை தற்போது மாற்றம் கண்டுள்ளது” என்றார். 

இவரைத் தொடர்ந்து பேசிய இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கேசவ கோகலே, “17 ட்ரில்லியன் டாலர் உள்நாட்டு உற்பத்தி கொண்டு உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக சீனா உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. குறிப்பாக பல காப்புரிமைகளை சீனா தன்வசம் வைத்துள்ளது மற்றும் சோலார் பேட்டரி, எலக்ட்ரானிக் வாகனங்கள்  என பல காரணங்கள் இருக்கின்றன. சீனாவில்  சமூக வலைதளங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. 

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இணையான பலத்தை கொண்டுள்ளதாக சீனா நம்புகிறது. ஆசிய பிராந்தியத்தில் சீனா மட்டுமே சக்தி வாய்ந்த நாடாக இருப்பதாக சீனா நம்புவது ஏற்புடையதல்ல. சீனாவிற்கு இணையான பலத்துடன் இந்தியா வளர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சீனாவுடன் இந்தியா 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவிற்கான வர்த்தகத்தை ஆண்டுதோறும் செய்கிறது. தற்போது சில காலமாக ஏற்பட்டுள்ள இந்தியா - சீனா பிரச்சனையில் சீனாவிலிருந்து இறக்குமதியை இந்தியா நிறுத்தினால் இந்தியாவுக்கு தான் அதிக பாதிப்பு” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: மதுவுக்கு எதிரானதா? கூட்டணிக்கு எதிரானதா? - மாநாடு குறித்து சந்தேகம் கிளப்பும் தமிழிசை

இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த அரசியல் அறிவியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு மாணவர் 2017 ஆம் ஆண்டு இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தை சீனா தன்வசம் கொண்டு வந்துள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விஜய் கேசவ கோகலே, “அம்பன் தோட்ட துறைமுக வளர்ச்சி திட்டம் இலங்கையால் முதலில் இந்தியாவிற்குதான் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்தியா தான் அதனை நிராகரித்தது. தற்போது சீனா அங்கு வளர்ச்சி பணிகளை மட்டுமே மேற்கொள்கிறது. எனவே அதில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த பாதகமும் இல்லை” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow