தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ஆரம்பம் முதலே ஆவேசமாக பேசத் தொடங்கிய விஜய், கூட்டணி பற்றியும் வெளிப்படையாக அறிவித்தார்.
அதன்படி, அரசியல் பயணத்தில் நம்மை நம்பி வருபவர்களையும் நாம் அன்போடு வரவேற்க வேண்டும். அப்படி வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் சமமான அதிகாரப் பங்கு கொடுக்கப்படும் என்றார். அதேநேரம், மாநில ஆளுங்கட்சியான திமுக, மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜக உட்பட மேலும் சில கட்சிகளையும் விஜய் சரமாரியாக தாக்கிப் பேசினார். திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுவதாக திமுகவையும், பாஜகவின் பிளவுவாத அரசியலையும் கடுமையாக சாடியிருந்தார்.
மாநாட்டுக்கு முன்பு வரை விஜய்யை தனது தம்பி என உரிமையோடு கொண்டாடிய சீமான், தற்போது தவெக கொள்கை தங்களுக்கு ஒத்துவராது என அதிரடியாக தெரிவித்தார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் விஜய்யை மோசமாக விமர்சனம் செய்தார்.
அப்போது, ‘திராவிடமும், தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும்? சாலையில் ஒன்று அந்த பக்கம் நிற்க வேண்டும். அல்லது இந்த பக்கம் நிற்க வேண்டும் நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் தம்பி. அவர்கள் கூறியது கொள்கை அல்ல, கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை’ என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சீமானின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘என்ன சீமான் சாபம் விடுறீங்க. விஜய் அண்ணாவுக்கு சாபம் விடுறீங்க. நீங்க என்ன உத்தமரா சீமான். கொள்கை ரீதியில் தவறு செய்பவர்கள் லாரி அடிச்சு சாவார்கள் என்றால்,. என்னை போன்ற பெண்ணை சீரழித்த நீங்கள் எது அடித்து சாக மாட்டீங்க சீமான்’ என காட்டமாக நடிகை விஜயலட்சுமி பேசி உள்ளார்.
மேலும் அவர், ‘உங்க கட்சி ஓட்டைய முதலில் அடைங்க, உங்க கட்சியில் நிறைய ஊழல் நடக்கிறது. அதனை முதலில் சரி பண்ணுங்க. திருச்சி சூர்யா உங்க ஆபாச வீடியோ வெளியிட்டு உங்க மானத்த வாங்கப் போகிறாராமே, அதனை போய் முதலில் பாருங்க சீமான்.
திமுகவுக்கு அவங்க வேலயை பாக்க தெரியும், விஜய் அண்ணாவுக்கு அவங்க வேல என்னன்னு தெரியும், தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலைய பார்க்க தெரியாம இருப்பது சீமான் தான். காலையில் எழுந்திருச்சி யாரையாவது சாபம்விட்டு பப்ளிசிட்டி தேடிட்டு இருக்கீங்க’ என நடிகை விஜயலட்சுமி பேசியுள்ளார்.
மேலும் அவர், ‘நீங்க தான் கூமுட்டை மாதிரி அலைஞ்சுட்டு இருக்கீங்க. பெரிய உத்தமர் மாதிரி சாப விடாதீங்க. 24 மணி நேரமும் உங்களுக்கு நான் சாபம் கொடுத்துட்டு இருக்கேன். தமிழ்நாடு மக்கள் செருப்பால் அடிச்சு ஒரு நாள் நீங்க சாவிங்க’ என்று ஆவேசமாக நடிகை விஜயலட்சுமி பேசி வீடியோவை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.