மதுவுக்கு எதிரானதா? கூட்டணிக்கு எதிரானதா? - மாநாடு குறித்து சந்தேகம் கிளப்பும் தமிழிசை

திருமாவளவன் நடத்தும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்ற சந்தேகம் உள்ளது என்று பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Sep 10, 2024 - 19:00
Sep 11, 2024 - 09:48
 0
மதுவுக்கு எதிரானதா? கூட்டணிக்கு எதிரானதா? - மாநாடு குறித்து சந்தேகம் கிளப்பும் தமிழிசை
தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திருமாவளவன்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “விநாயகர் சதுர்த்தி சேவை விழாவாக பாஜக கொண்டாடி வருகிறது. இது மதம் சார்ந்த விழாவாக யாரும் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்தமாக சேவை விழாவாக தான் பார்க்கிறார்கள் பாஜகவின் கொள்கையும் அது தான்.

இந்துமத கொள்கைக்கு அனாவசியமாக யாரும் எதிர்ப்பு தெரிவித்தால் அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் நாங்கள் தான். ராகுல் காந்தி இந்தியனைப் போல பேசவில்லை ஒரு அந்நியனை போல பேசியுள்ளார். ராகுல் காந்திக்கு தலைவர் என்றாலே அவர்களுக்கு அவருடைய அம்மாவும் பாட்டியும் தான்.

இந்தியாவின் பெண்கள் சமையல் அறையில்தான் இருக்கிறார்கள் என்று வெளிநாட்டிற்க்கு ராகுல் காந்தி கூறியதை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை மன்னிக்ககூடியது அல்ல. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வளவு பேசும் நீங்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக, ஒரு பெண் நியமிக்கப்பட்டபோது, அவரை எதிர்த்து ஏன் மற்றொரு வேட்பாளரை நிறுத்துனீர்கள்?

திருமாவளவன் மதுவுக்கு எதிராக மாநாடு நடத்துவதாகவும், அதற்கு அதிமுகவிற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், அந்த மாநாட்டில் மதவாத சக்திகளை சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறார். மதுவைப் பற்றி பேசும் பொழுது ஏன் மதத்தைப் பற்றி பேசுகிறீர்கள்? என்று நான் கேட்கிறேன். நாங்கள் ஏற்கனவே மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டிருக்கிறோம்.

திமுகவுடன் கூட்டணியில் இருந்தால் 2026 இல் வெற்றி கிடைக்காது என்று விசிக எண்ணுகிறது. இது மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்ற சந்தேகம் உள்ளது. மது ஒழிப்பேன் என்றுதான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஏன் இன்னும் அவர்கள் மதுவை ஒழிக்கவில்லை. திமுகவுடன் உள்ள கூட்டணிகள் ஒவ்வொன்றும் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

வெளிநாட்டு பயணம் குறித்தும், இதுவரை பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும். தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலை இல்லாமல், முதல்வர் வெளிநாடு பயணம் சென்றுள்ளார். ஆனால் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களின் மீது அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow