வேட்டையனுக்கு பிறகு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ரெடி!.. டி.ஜே.ஞானவேலின் பான் இந்தியா படம்..

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள வேட்டையன் திரைப்படம், ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அதன் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Sep 11, 2024 - 01:27
Sep 11, 2024 - 15:18
 0
வேட்டையனுக்கு பிறகு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ரெடி!.. டி.ஜே.ஞானவேலின் பான் இந்தியா படம்..
உணவக உரிமையாளர் பி.ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி ஆகியோரின் கதையை மையப்படுத்தி உருவாகும் ‘Dosa King'

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள நிலையில், வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. வேட்டையன் திரைப்படத்தின் ;ஃப்ர்ஸ்ட் சிங்கிள்’ மனசிலாயோ, வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, இயக்குனர் டி.ஜே.ஞானவேல் மீண்டும் ஜங்க்ளி பிக்சர்ஸின், Dosa King-உடன் மற்றொரு சிறந்த சினிமா படத்தை வழங்க உள்ளார். Badhaai Do மற்றும் Raazi போன்ற படங்களை தயாரித்த ஜங்க்ளி பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தில் ஞானவேல் உடன் இணைந்துள்ளது.

டி.ஜே.ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்த திரைப்படம் பான்-இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது. உணவக உரிமையாளர் பி.ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி ஆகியோருக்கு இடையேயான மோதல், லட்சியம், அதிகாரம் மற்றும் நீதிக்கான போர் ஆகியவை கதைக்களமாக அமைக்கிறது.

18 ஆண்டுகால கடுமையான சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, நீதி வழங்கப்பட்ட நிலையில், முறையாக உரிமைகளை பெற்ற பிறகு, மிக பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது. தனது கருத்துச் செறிவுமிக்க கதைக்களங்கள் மற்றும் கதாபாத்திரங்களுக்காக கொண்டாடப்பட்ட ஞானவேல், உலகளவில்  பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் தனியார் உணவக உரிமையாளர் ராஜகோபாலின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை தத்ரூபமாக வடிவமைக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் இணை எழுத்தாளரான ஹேமந்த் ராவ், கன்னடத்தில், Godhi Banna Saadharna Manushya, Kavaludaari, Saptta Saagaradaache Ello-Side A/ Side B, போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை எழுதி இயக்கியவர் ஆவார்.

மேலும், அவர் இந்தி சினிமாவில் பரவலாகப் பாராட்டப்பட்ட "Andhadhun" என்ற படத்தின் இணை எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஞானவேல் எழுதி இயக்கிய ஜெய்பீம் [Jai Bhim] திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருந்ததும் கவனிக்கத்தக்கது.

இது குறித்து உற்சாகமாக கூறியுள்ள இயக்குநர் டி.ஜெ.ஞானவேல், “பத்திரிக்கையாளராக இருந்த காலத்திலிருந்தே ஜீவஜோதியின் கதையைப் பின்பற்றி வருகிறேன். பத்திரிக்கைகள் பல விவரங்களை பரபரப்பாக்கிய போதும், கதையின் பெரும்பகுதி சொல்லப்படவில்லை. 'Dosa King' கதை, நடைபெற்ற குற்றத்தின் அடிப்படையில், திரில்லர் அம்சங்களுடன் உருவாக உள்ளது.

நன்கு ஆராய்ந்து, வழக்கில் சொல்லப்படாத கருத்துக்களை பிணைத்து, புதியதொரு கண்ணோட்டத்துடன் ஆழமான கதையைச் சொல்ல விரும்புகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நேரில் பார்த்த கதையைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்தப் படம் எனக்கு கிடைத்த வாய்ப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் நடிகை, நடிகையர் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளிவரும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow