TVK Party Flag: தவெக கொடியில் இருப்பது வாகை மலரே இல்லையாம்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

Vijay TVK Party Flag Vagai Flower : சங்க காலத்தில் போரில் வெற்றி பெற்ற அரசனும், வீரர்களும் வெற்றியின் அடையாளமான வாகைப்பூவை சூடி அந்த வெற்றியை கொண்டாடுவார்கள் என்று தமிழ் இலக்கியங்களில் உள்ளது. இப்படிப்பட்ட பெருமை கொண்ட வாகை மலர் தவெக கொடியில் இடம்பெற்று இருப்பதாக தவெக நிர்வாகிகளும், விஜய் ரசிகர்களும் பெருமை தெரிவித்து வந்தனர்.

Aug 23, 2024 - 15:09
Aug 24, 2024 - 15:34
 0
TVK Party Flag: தவெக கொடியில் இருப்பது வாகை மலரே இல்லையாம்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
Vijay TVK Party Flag Vagai Flower

Vijay TVK Party Flag Vagai Flower : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்த அவர் கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறியிருந்தார். 

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் நேற்று அறிமுகம் செய்தார். பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், கட்சியின் பாடலையும் வெளியீடு செய்தார். இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி, அம்மா ஷோபா, கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தவெக கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்று கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகை மலரை சுற்றிலும் 28 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் உள்ளன. இந்த கொடி குறித்து தவெகவின் முதல் மாநாட்டில் விளக்கம் அளிக்கப்படும் என்று விஜய் கூறியிருந்தார்.

தவெக கொடி fevicol லோகோ போன்று இருப்பதாகவும், கேரள அரசு போக்குரத்து கழகத்தின் லோகோ (KSRTC LOGO) உள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்தை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் கிண்டலடித்து வந்தனர். 

இது ஒருபுறம் இருக்க, சங்க காலத்தில் போரில் வெற்றி பெற்ற அரசனும், வீரர்களும் வெற்றியின் அடையாளமான வாகைப்பூவை சூடி அந்த வெற்றியை கொண்டாடுவார்கள் என்று தமிழ் இலக்கியங்களில் உள்ளது. இப்படிப்பட்ட பெருமை கொண்ட வாகை மலர் தவெக கொடியில் இடம்பெற்று இருப்பதாக தவெக நிர்வாகிகளும், விஜய் ரசிகர்களும் பெருமை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், விஜய்யின் தவெக கொடியில் இருப்பது வாகை மலரே இல்லை என்றும் அது தூங்கு மூச்சி மலர் எனவும் நெட்டிசன்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கருத்துகளை கூறி வருகின்றனர். அதாவது சங்க இலக்கிய வாகை மலர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் தவெக கொடியில் உள்ள மலர் இளம்சிகப்பு நிறத்தில் உள்ளது.

தவெக கொடியில் இருப்பது தூங்கு மூச்சி வகை மலர் ஆகும். இது வாகை பூ கிடையாது. வாகை பூவின் இனத்தில் வரக்கூடியது என்றும் தவெக கொடியில் இருப்பது தென் ஆப்பிரிக்க நாட்டில் காணப்படும் ஒருவகை காட்டுப்பூ எனவும் நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து வரும் விஜய் ரசிகர்கள், தவெக கொடியில் இருப்பது வாகை மலரே என்று சத்தியம் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow