பழமையான கோவில் பிரகாரத்திற்குள் திமுக கொடியுடன் கார்... ஆகம விதிமுறை மீறலா..? பொங்கிய பக்தர்கள்

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mar 20, 2025 - 22:05
Mar 21, 2025 - 11:10
 0
பழமையான கோவில் பிரகாரத்திற்குள் திமுக கொடியுடன் கார்... ஆகம விதிமுறை மீறலா..? பொங்கிய பக்தர்கள்

விருத்தாச்சலத்தில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புண்ணிய ஸ்தலமான கோவிலின் பிரகாரத்திற்குள்,  திமுக கொடி கட்டிய கார், ஆகம விதிமுறை மீறி,  நிறுத்தப்பட்டிருப்பதை கண்டு கொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகளால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

பழமையான கோவில்

கடலூர் மாவட்டம்,  விருத்தாசலத்தில்  3000 ஆண்டுகளுக்கு மேல், பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமான ஸ்ரீ அருள்மிகு விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரிஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து கோபுரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம், ஐந்து உள் மண்டபம், ஐந்து வெளி மண்டபம் என அனைத்தும், ஐந்து ஐந்தாக இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

Read more: ஐபிஎல்2025: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதி –பிசிசிஐ அதிரடி

மேலும் காசியை விட பெரியது, என போற்றப்படும் இத்திருக்கோயில் ஆனது,  இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில்  இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 

இந்நிலையில் ஆகம விதிமுறைகளை மீறி, புண்ணிய ஸ்தலமான இத்திருக்கோயிலின் உள் பிரகாரத்தில் திமுக கொடி கட்டிய கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

திமுகவினர் சாமி தரிசனம்

ஆளும் கட்சி என்பதால் கோவிலுக்குள்ளேயே காரைக்கொண்டு வந்து நிறுத்திவிட்டு திமுகவினர் சாமி தரிசனம் செய்வதாகவும், இதனை தடுக்க வேண்டிய விருத்தாச்சலம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்  வேடிக்கை பார்ப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

Read more :வங்கி ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- கணவரை கைது செய்த போலீஸ்

இதுகுறித்து  இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், புண்ணிய ஸ்தலமாக இருக்கக்கூடிய கோவிலுக்குள், வாகனங்கள் வருவதை தடை செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow