ஐபிஎல்2025: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதி –பிசிசிஐ அதிரடி

ஐபிஎல்லில் மட்டுமே எச்சில் பயன்பாட்டு தடை ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் விதியை தளர்த்த ஐசிசி கிரிக்கெட் குழு விரைவில் இந்த பிரச்சினையை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Mar 20, 2025 - 20:40
Mar 20, 2025 - 20:42
 0
ஐபிஎல்2025: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதி –பிசிசிஐ அதிரடி
ஐபிஎல்2025: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதி –பிசிசிஐ அதிரடி

ஐபிஎல் தொடருக்கான கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

உமிழ்நீர் தடை

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வருகிற 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க உள்ளது.  முதல் போட்டியில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதல் உள்ளன.கோவிட் தொற்றுநோய் காலத்தில் மே 2020ல் உமிழ்நீர் தடை அறிமுகப்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 2022ல், இந்தத் தடை 'பொருத்தமானது' என்று கருதப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டது. உமிழ்நீரைப் பயன்படுத்தும் பழங்கால நடைமுறை சுகாதாரமற்றது என்றும், பந்து வீச்சாளர்கள் அது இல்லாமல் வாழப் பழகிவிட்டார்கள் என்றும் அப்போது கருத்து இருந்தபோதிலும், ஒரு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல்லில் மட்டுமே எச்சில் பயன்பாட்டு தடை ரத்து

சாம்பியன்ஸ் டிராபியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு கடினமாக உள்ளதாகவும், அதனால் பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர் பயன்பாட்டை அனுமதிக்கும் வேண்டும் என தெரிவித்திருந்தார்.அவருக்கு டிம் செளதியும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மும்பையில் இன்று இந்தியன் பிரீமியர் லீக்கில், ஐபிஎல் 2025க்கு முன்னதாக பிசிசிஐ தலைமையகத்தில் நடந்த கேப்டன்கள் கூட்டம் நடந்தது. இதில் இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

Read more: நான் மிகவும் இழிவுபடுத்தப்படுகிறேன்.. பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.. இயக்குநர் கோபி நயினார் அறிவிப்பு

ஐபிஎல்லில் மட்டுமே எச்சில் பயன்பாட்டு தடை ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் விதியை தளர்த்த ஐசிசி கிரிக்கெட் குழு விரைவில் இந்த பிரச்சினையை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow