கண்ணூரில் எஸ்பிஐ பெண் வங்கி ஊழியரை வங்கியில் வைத்து அரிவாளால் வெட்டிய கணவரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
வங்கி ஊழியருக்கு அரிவாள் வெட்டு
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்திலுள்ள தளிப்பரம்பா பூவம் பகுதியில் செயல்படும் எஸ்பிஐ வங்கியில் காசாளராக பணியாற்றுபவர் அனுபமா. இவரது கணவர் அனுரூப். இவர் குட்டிக்கோலில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Read more:தாய் மீது கொண்ட அதீத பாசம்..விபரீத முடிவெடுத்த பெண்... சோகத்தில் பிள்ளைகள்
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வங்கிக்கு வந்த அனுரூப், அனுபமாவை வங்கியிலிருந்து வெளியே அழைத்து சென்று வங்கி வெளியில் வைத்து சில விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது கோபமடைந்த அனுரூப் தான் வைத்திருந்த அரிவாளால் அனுபமாவை வெட்டியுள்ளார். அனுபமா, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வங்கிக்குள் ஓடியுள்ளார். அவரைத் தொடர்ந்து சென்ற அனுரூப், மீண்டும் அவரை வெட்டியுள்ளார்.
போலீஸ் விசாரணை
இதனை பார்த்த வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பொதுமக்கள் அனுரூப்பை பிடித்து, கட்டி வைத்தனர், தளிப்பரம்பா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், எஸ்.ஐ தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து அனுரூப்பை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்த அனுபமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
Read more: ஐபிஎல்2025: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதி –பிசிசிஐ அதிரடி