தமிழ்நாடு

தி.மலையில் ஏரி மண் கடத்தி பதுக்கிய பாமக மா.செ... எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர்

தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததின் பெயரில் அங்கிருந்து பாமக மாவட்ட செயலாளர் செய்வதறியாது சென்று விட்டார்.

தி.மலையில் ஏரி மண் கடத்தி பதுக்கிய  பாமக மா.செ... எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர்

திருவண்ணாமலை அருகே உரிய அனுமதி பெறாமல் இரவு, பகலாக ஏரி மண் கடத்தி பதுக்கி வைத்துள்ள பாமக மாவட்ட செயலாளருக்கு வட்டாட்சியர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏரி மண் பதுக்கல்

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட புறவழிச் சாலையில் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட கீழ்நாத்தூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி கீழ்நாத்தூர், ஏந்தல், பள்ளிகொண்டாப்பட்டு உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாகவும் விவசாய பயன்பாட்டிற்குற்கு இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

Read more: வங்கி ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- கணவரை கைது செய்த போலீஸ்

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வரலாறு காணாத கனமழை திருவண்ணாமலை கொட்டி தீர்த்தபொழுது கீழ்நாத்தூர் ஏரியில் சில இடங்களில் கரை உடைந்து வெள்ள நீர் காற்றாட்டு வெள்ளம் போல் சென்றது. தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்து வறண்ட நிலையில் காணப்படுகிறது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக செயலாளர் பக்தவச்சலம் ஏந்தல் கிராமத்தில் சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வருகிறார். 

செங்கல் சூளை

ஏரி உடைந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஏரிக்கரை பலப்படுத்துவதாக ஏரியில் இருந்து ஏரி மண்ணை எடுத்து கடந்த ஒரு மாத காலமாக இரவு, பகல் நேரங்களில் ஒரு சில லோடுகளை மட்டும் ஏரி கரையில் கொட்டி சமன்படுத்திவிட்டு நூற்றுக்கணக்கான லோடுகளை செங்கல் சூளை கடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பகல் நேரங்களில் ஒரு சில லோடுகளை மட்டும் ஏரிக்கரையில் கொட்டி விட்டு இரவு நேரங்களில் அருகாமையில் உள்ள ஒரு பள்ளி வளாகத்திலும் மற்றும் தனக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான லோடு ஏரி மண்ணை கடத்தி  செங்கல் சூளைக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

வட்டாட்சியர் எச்சரிக்கை

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் துரைராஜ் இன்று வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கீழ்நாத்தூர் ஏரியில் மண் அள்ளக்கூடிய இடத்தை பார்வையிட்டு இதுகுறித்து விசாரித்த பொழுது ஏரிக்கரையை பலப்படுத்துவதாக பாமக மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் வட்டாட்சியர் துரைராஜிடம் கூறியுள்ளார்.

Read more: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு அதிரடி

குறிப்பாக ஏரி மண் அள்ளும்பொழுது மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததின் பெயரில் அங்கிருந்து பாமக மாவட்ட செயலாளர் செய்வதறியாது சென்று விட்டார்.வருவாய்த்துறை உத்தரவையும் மீறி பகல், இரவு பாராமல் பாமக மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தனது சொந்தமான லாரியில் ஏரி மண்ணை கடத்தி அருகில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் பதுக்கி வைத்து பின்பு பொதுமக்கள் யாரும் இல்லாத இரவு நேரங்களில் கடத்தி செல்வது குறிப்பிடத்தக்கது.