தாய் மீது கொண்ட அதீத பாசம்..விபரீத முடிவெடுத்த பெண்... சோகத்தில் பிள்ளைகள்

கடந்த 18ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து திடீரென யாரிடமும் சொல்லாமல் வெளியேறி மின்சார ரயிலை பார்த்ததும் ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டதும் ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Mar 20, 2025 - 17:22
Mar 20, 2025 - 17:52
 0
தாய் மீது கொண்ட அதீத பாசம்..விபரீத முடிவெடுத்த பெண்... சோகத்தில் பிள்ளைகள்

சென்னையில் மின்சார ரயிலில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட பதபதைக்க வைக்கும் வீடியோ வெளியான விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெண் விபரீத முடிவு

கடந்த 18-ம் தேதி மாலை 6 மணி அளவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் பழவந்தாங்கல் மற்றும் செயின் தாமஸ் மவுண்ட் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.அவர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more:என்னடா பண்றீங்க..? பாம்பு காட்டி பிச்சை கேட்கும் கும்பலால் பொதுமக்கள் பீதி

இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது ரயில் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றதால் ரயிலில் அடிபட்டு இறந்தாரா? மேலும், இறந்த பெண் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

மனதளவில் பாதிப்பு

இந்த நிலையில், அந்த பெண் தற்கொலை செய்துதான் உயிர் இழந்துள்ளார் என மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், உயிரிழந்த பெண் பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கவிதா (48) என்பதும் தெரிய வந்தது.திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கவிதாவின் தாய் அமிர்தவள்ளிக்கு வீட்டில் இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதும், அப்போது கவிதா தனது அம்மாவான அமிர்தவள்ளியை மடியில் வைத்து அழுது கொண்டிருந்தபோதே அவரது உயிர் பிரிந்துள்ளது.இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து, கடந்த 4 ஆண்டுகளாக கவிதா மனரீதியாக பாதிக்கப்பட்டு வந்ததாகவும், அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி "அம்மா அழைக்கிறார்" என வெளியே சென்று விடுவதும், பின்னர் குடும்பத்தினர் மீட்டு கொண்டு வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை

மேலும், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்ததும், கவிதாவின் மன அமைதிக்காக குடும்பத்தினர், இவரை கோவில், பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக அழைத்துச் செல்வதும் தெரிய வந்தது.இந்த நிலையில், தான் கடந்த 18ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து திடீரென யாரிடமும் சொல்லாமல் வெளியேறி பழவந்தாங்கல் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றதும், அப்போது தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலை பார்த்ததும் ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டதும் ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம், குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow