என்னடா பண்றீங்க..? பாம்பு காட்டி பிச்சை கேட்கும் கும்பலால் பொதுமக்கள் பீதி
பாம்பை கண்டவுடன் பொதுமக்கள் அலறி அடித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதி தமிழக ஆந்திர எல்லையினை இணைக்கும் மிக முக்கிய பகுதியாகும். வேலூர் மாநகரத்தை காட்டிலும் காட்பாடி பகுதியில் அதிகமாக வணிக நிறுவனங்கள், கடைகள் என ஆயிரக்கணக்கில் இயங்கி வருகிறது. அதனால் இந்த காட்பாடி பகுதியானது 24 மணி நேரமும் ஆள் நடமாட்டம் தென்படுவதோடு பரபரப்பாகவே காணப்படும்.
நாள்தோறும் காட்பாடி ரயில் நிலையம், சித்தூர் பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் குழந்தைகளை வைத்தும் சாமியார்களும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள் என நாள்தோறும் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வருவது வாடிக்கையாகவே இருந்து வந்தது.
பாம்பைக் காட்டி பிச்சை:
இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பூர்விகா மொபைல் ஷோரூம் மற்றும் அதன் அருகில் உள்ள பல்வேறு கடைகளில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் பாம்பை தோளின் மீது போட்டுக்கொண்டு பொதுமக்களிடம் யாசகம் கேட்கின்றனர்.
அந்தப் பாம்பை கண்டவுடன் பொதுமக்கள் கடைகளில் இருந்து அலறி அடித்து ஓடுகின்றனர். வேறு வழியின்றி ஒரு சிலர் அவர்களுக்கு பிச்சை போடுகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்பொழுது இதுகுறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களிடம் ஐயா..அம்மா என்று கேட்டால் பிச்சை போட மாட்டார்கள். அதனால் பாம்பை காட்டினால் பயந்தாவது தங்களுக்கு பிச்சை போடுவார்கள் என்ற தோனியில் இவர்களின் செயல்பாடு உள்ளது. இதுபோன்று மிருகங்களை வைத்து பிச்சை கேட்கும் நபர்களை போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்பாடி வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read more: குறைந்த விலையில் தங்க கட்டி: அதீத ஆசையால் 48 லட்சத்தை இழந்த நபர்!
What's Your Reaction?






