“2026ல் விஜய் தான் முதலமைச்சர்... 5,000, 10,000 கோடி..?” தவெக நிர்வாகிகளை அலறவிட்ட புஸ்ஸி ஆனந்த்

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் முதலமைச்சர் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Jul 8, 2024 - 22:19
 0
“2026ல் விஜய் தான் முதலமைச்சர்... 5,000, 10,000 கோடி..?” தவெக நிர்வாகிகளை அலறவிட்ட புஸ்ஸி ஆனந்த்
விஜய் - புஸ்ஸி ஆனந்த்

சென்னை: கோடம்பாக்கத்தில் இருந்து ஜார்ஜ் கோட்டை நோக்கி செல்வதற்கு ரெடியாகிவிட்டார் தளபதி விஜய். வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் படத்தில் நடித்து வரும் விஜய், 2026 தேர்தலில் நேரிடையாக களமிறங்கவுள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், இன்னும் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளாராம். அதன்பின்னர் முழுக்க முழுக்க அரசியலை மட்டுமே இலக்காக வைத்து பயணிக்கவுள்ளார் விஜய். கடந்தாண்டு தனது மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கான கல்வி விருது விழா நடத்தியிருந்தார். அதேபோல் இந்தாண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இரண்டாவது கட்டமாக நடைபெற்ற விருது விழாவில், நீட் தேர்வு குறித்து விஜய் பேசியது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. முன்னதாக கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க கள்ளக்குறிச்சி சென்றிருந்தார் விஜய். இப்படி கடந்த சில தினங்களாகவே விஜய்யின் அரசியல் நிலைப்பாடு அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்றுகொண்டே இருக்கிறது. விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளைத் தவிர பொது இடங்களில் அதிகம் பேசுவது கிடையாது. ஆனால், மாணவர்கள் கல்வி விருது விழாவில் நீட் தேர்வுக்கு எதிராக பேசியது முதல் கொஞ்சம் கொஞ்சமாக சீரியஸ் மோடுக்கு மாறி வருகிறார் விஜய். 

ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் புரியாத புதிராக உள்ளார். விஜய் ரசிகர்களுக்கே அவர் ஒரு ட்ரோல் மெட்டீரியல் தான் என்பது அனைவரும் அறிந்ததே. செய்தியாளர்கள் சந்திப்பில் எந்த கேள்வி கேட்டாலும், எல்லாத்துக்கும் தலைவர் முடிவு எடுப்பார் என கிரேட் எஸ்கேப் ஆகிவிடுவார். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தவெக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது தவெக நிர்வாகிகளையும் விஜய் ரசிகர்களை அலறவிட்டுள்ளது. "5000, 10,000 ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்யவே விஜய் அரசியலுக்கு வருகிறார். 2026 தேர்தலில் தளபதி விஜய்யை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வைக்க வேண்டும்” என வைப் கொடுத்தார்.

பொதுவாக விஜய் ஒரு படத்துக்கு 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதனை சினிமா பிரபலங்களே பல இடங்களில் வெளிப்படையாக பேசியுள்ளனர். சமுத்திரகனி, பார்த்திபன் போன்ற முன்னணி நடிகர்கள் கூட, விஜய் பல நூறு கோடி வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது பெரிய விஷயம் தான் என பாராட்டியிருந்தனர். அவர்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில் புஸ்ஸி ஆனந்த் பேசியது தான் இப்போது ட்ரோல் கன்டென்ட் ஆகியுள்ளது. அதாவது, “ஏற்கனவே ஒருமுறை இறக்குமதி செய்த காருக்கு வரி கட்ட மாட்டேன் என கூறி நீதிமன்றம் வரை சென்று குட்டு வாங்கினார் விஜய். இவரை வருமானவரி துறையிடம் மாட்டிவிடாமல் புஸ்ஸி ஆனந்த் விடமாட்டார் போல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதேபோல், “ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால் கூட, 100 படம் நடித்தால் தான் புஸ்ஸி ஆனந்த் சொன்ன 5000 கோடி, பத்தாயிரம் கோடி கணக்கில் வரும். ஆனால் விஜய்யோ இதுவரை 68 படங்கள் கூட நடிக்கவில்லையே” என பங்கம் செய்துள்ளனர். மேலும், சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து விஜய் வெளிநாடுகளில் சொத்து வாங்கி வைத்துள்ளாரா... இதை தான் புஸ்ஸி ஆனந்த் சொல்ல வருகிறாரா... இவர் பேசுவதை பார்த்தால் ஐடி ரெய்டு கன்ஃபார்ம் எனவும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். விஜய் வீட்டுக்கு ஐடி ரெய்டு வந்தால் அதற்கு புஸ்ஸி ஆனந்த் தான் காரணமாக இருப்பார், இவரை கட்சியில் இருந்து தூக்கிவிட்டாலே போதும், விஜய் முதலமைச்சர் ஆகிவிடுவார் எனவும், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இறங்கி வந்து சம்பவம் செய்து கொண்டிருக்கின்றனர்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow