தமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்! திட்டம் படைத்த சாதனை இதுதான்!

2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருதை தமிழ்நாட்டின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவித்துள்ளது ஐ.நா சபை. இதுகுறித்து பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்! திட்டம் படைத்த சாதனை இதுதான்!

2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருதை தமிழ்நாட்டின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவித்துள்ளது ஐ.நா சபை. இதுகுறித்து பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி, வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை, பல்வேறு பரிசோதனை ஆகியவை வழங்க வழிவகை செய்யப்பட்டது.
 
இத்திட்டத்தில் ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில் பயன்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக  2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருதை இத்திட்டத்திற்கு அறிவித்துள்ளது ஐ.நா சபை. இதுகுறித்து பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அப்பதிவில், “இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது!

ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது!

சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி - கண்காணித்து - மேம்படுத்தி வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

மேலும் படிக்க: ’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.. சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் போலீஸ்

இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்!” என பதிவிட்டுள்ளார்.