ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை.. விதிமுறைகளை மீறியதால் மறுப்பு

RSS Rally in Tamil Nadu : தமிழகத்தில் வரும் அக்டோபர் ஆறாம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

Sep 26, 2024 - 12:15
Sep 26, 2024 - 17:24
 0
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை.. விதிமுறைகளை மீறியதால் மறுப்பு
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பு

RSS Rally in Tamil Nadu : 58 இடங்களில் அனுமதி கேட்ட நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை வந்தபோது அரசு தரப்பில் அணி வகுப்புக்கு அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அளித்த மனுக்களை, பரிசீலித்து வருவதாகவும், செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்றார்.

நீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும், ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

அதற்கு முன்பாக, அனுமதிக்கோரிய விண்ணப்பங்கள் மீது பரிசீலித்து முடிவுகளை அறிக்கையாக தெரிவிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தமிழக காவல்துறையால் மறுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக வகுக்கப்பட்ட விதிமுறைகள் மீறியதால்  அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow