கேரளா மக்களின் ஆசி… தமிழ்நாடு மீது பாசம்.. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி நெகிழ்ச்சி

கேரள மக்கள் கொடுத்த ஆசீர்வாதத்தில் அமைச்சராக பதவியேற்றுள்ளேன் நான் என்ன செய்தாலும் அது அவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்று நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி கூறியுள்ளார்.சென்னை என்னை வளர்த்த இடம் தூங்குவதற்கு இடம் கொடுத்தது சென்னை வாய்ப்பும் கொடுத்த இடம் தமிழ்நாட்டை நான் நேசிக்கிறேன் பாசம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார் சுரேஷ் கோபி.

Jul 3, 2024 - 15:42
Jul 3, 2024 - 16:58
 0
கேரளா மக்களின் ஆசி… தமிழ்நாடு மீது பாசம்.. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி நெகிழ்ச்சி
Union Minister Suresh gobi

லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருணாகரனின் மகன் முரளிதரன் தோல்வியடைந்தார். கேரளா மாநிலத்தில் முதன் முறையாக தாமரையை மலர வைத்த சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்த சுரேஷ் கோபி,இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தை நான் நேசிக்கிறேன் என்னுடைய ஆரம்ப காலத்தில் தூங்குவதற்கும் உணவு அளித்த தமிழ்நாட்டை நேசிக்கிறேன். கேரள மக்கள் கொடுத்த ஆசீர்வாதத்தில் அமைச்சராக பதவியேற்றுள்ளேன். நான் என்ன செய்தாலும் அது அவர்களுக்கும் போய் சேர வேண்டும்.

தேர்தலுக்கு முன்பே நான் தமிழ்நாட்டிற்கும் அமைச்சராக இருப்பேன் என கூறி இருந்தேன் என்னை இப்பொழுது தேர்வு செய்துள்ளார்கள் அதனால் எந்தெந்த இடங்களுக்கெல்லாம் நான் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று நான் செய்ய வேண்டிய வேலைகளை செய்துதான் ஆகவேண்டும். 

காவேரி குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் கட்டாயமாக நடக்க வேண்டும் நான் இப்பொழுதுதான் பொறுப்பேற்றுள்ளேன் எனக்கு சுற்றுலாத்துறை சரியாக இருக்கும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எனது சிந்தனையை செலுத்த முடியும். பெட்ரோலியத்தை பொறுத்தவரையில் முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்தது இதை பற்றி கற்றுக் கொண்டுதான் அதனுடைய வேலைகளை நான் செய்ய முடியும்.
 
பெட்ரோல் விலை குறைப்பு குறித்து கேட்ட பொழுது, பெட்ரோல் விலை குறைப்பு  நாம் சிந்தனை செய்ய முடியாது நான் இதை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன் அனைவருக்கும் இதை விளக்கமாக கூறி கற்பிக்க முடியாது. அதற்கெல்லாம் வழி வந்து விடும் என நினைக்கிறேன். குருடாயில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இவை எல்லாம் பற்றி அனைவரும் புரிந்து கொண்டால் இந்த கேள்வி எல்லாம் வராது என நான் நினைக்கிறேன்.

சபரிமலையில் கடந்த வருடம் முறையாக பக்தர்களுக்கான தரிசன ஏற்பாடுகள் செய்யவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சுரேஷ் கோபி, சபரிமலையை எல்லாம் யாரும் தொட முடியாது தொட்டவர்கள் எல்லாம் எங்கேயோ போய் உட்கார்ந்து விட்டார்கள்
சென்னை என்னை வளர்த்த இடம் தூங்குவதற்கு இடம் கொடுத்தது சென்னை வாய்ப்பும் கொடுத்த இடம்  தமிழ்நாட்டை நான் நேசிக்கிறேன் பாசம் இருக்கிறது எனக்கு  என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சுரேஷ் கோபி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow