Ajith Shalini: ஷாலினிக்கு என்னாச்சு..? மருத்துவமனையில் மனைவியுடன் அஜித்.. ட்ரெண்டாகும் போட்டோ!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாலினியின் கைகளை பிடித்தபடி, அவரது அருகில் அஜித் அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Jul 3, 2024 - 20:59
Jul 3, 2024 - 21:08
 0
Ajith Shalini: ஷாலினிக்கு என்னாச்சு..? மருத்துவமனையில் மனைவியுடன் அஜித்.. ட்ரெண்டாகும் போட்டோ!
ஷாலினியுடன் அஜித் குமார்

சென்னை: விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த அஜித், இரு தினங்களுக்கு முன்னர் திடீரென சென்னை திரும்பினார். ஏற்கனவே சில மாதங்களாக விடாமுயற்சி படப்பிடிப்பு கிடப்பில் இருந்து, தற்போது தான் மீண்டும் தொடங்கியது. விடாமுயற்சி படப்பிடிப்பு ரத்து ஆனதால் தான் குட் பேட் அக்லி படத்தில் கமிட்டானார் அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்ற அஜித், போன வேகத்தில் சென்னைக்கு வந்தது ஏன் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

அஜித் ரிட்டர்ன் ஆனதை பார்த்து திரும்பவும் விடாமுயற்சி ஷூட்டிங் ட்ராப் ஆகிவிட்டதா என ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், அஜித் சென்னை திரும்பியதற்கான காரணம் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனை ஷாலினியே தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு புரிய வைத்துள்ளார். அதாவது ஷாலினி மருத்துவமனையில் இருக்க, அவரது கையை பிடித்தபடி பக்கத்தில் அமர்ந்துள்ளார் அஜித். இந்த போட்டோவை ஷேர் செய்துள்ள ஷாலினி, ‘Love you forever’ என கேப்ஷனும் கொடுத்துள்ளார். ஷாலினிக்கு சிறிய சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் அவரை பார்த்துக்கொள்வதற்காகவே அஜித் அவசரமாக சென்னை வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் அஜித்துக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஷாலினி அஜித்துடன் இருந்து அவரை கேர் எடுத்து பார்த்துக்கொண்டார்.

அதேபோல் தற்போது ஷாலினிக்கு சர்ஜரி என்றதும், அவரை தனியே விடாமல் அஜித் ஓடி வந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அமர்க்களம் படப்பிடிப்பின் போது அஜித் – ஷாலினி இடையே காதல் மலர்ந்தது. இதனை ரகசியமாக வைத்திருந்த இருவரும், தங்களது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அஜித் – ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். தனது குடும்பத்தினரை அஜித் அதிக கேர் எடுத்து பார்த்து வருவது அனைவரும் அறிந்ததே. அஜித் செல்ல முடியாத நிகழ்ச்சிகளுக்கு, ஷாலினி தனது மகள், மகனுடன் சென்று வருவதும் வழக்கமானது தான்.

இந்நிலையில் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், உடனே சென்னை திரும்பி விட்டார் அஜித். கோலிவுட்டில் பல நட்சத்திர தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுகின்றனர். செல்வராகவன் – சோனியா அகர்வால், நாக சைதன்யா – சமந்தா, தனுஷ் – ஐஸ்வர்யா, இயக்குநர் விஜய் – அமலா பால் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இவர்களுக்கு மத்தியில் அஜித்தும் ஷாலினியும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான காதல் தம்பதிகளாக வலம் வருகின்றனர். வீட்டில் இருக்கும் போது தனது மனைவிக்கு பிரியாணி சமைத்துக் கொடுக்கும் அஜித், மருத்துவமனையிலும் அவரது கையை பிடித்தபடி ஆறுதலாக உடனிருப்பது நெகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow