Shihan hussaini: ஷிஹான் ஹுசைனி மறைவு விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு.. அண்ணாமலை இரங்கல்
நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கிய ஷிஹான் ஹுசைனி மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஷிஹான் ஹுசைனி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ திரைப்படத்தில் அவருக்கு கராத்தே பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக நடித்து அசத்தியிருப்பார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் வில் வித்தை வீரராகவும் திகழ்ந்தார். ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷிஹான் ஹுசைனி இன்று (மார்ச் 25) அதிகாலை 1:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கட்சி தலைவர்கள், ரசிகர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை இரங்கல்
இந்நிலையில், நடிகர் ஷிஹான் ஹுசைனுக்கு இரங்கல் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “உலக அளவில் புகழ்பெற்ற தற்காப்புக் கலைகள் பயிற்சியாளரும், வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்திய வில்வித்தை கழகத்தின் தேசியத் துணைத் தலைவராகச் சிறப்பாக பணியாற்றியவர். நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கியவர். சிற்பக் கலையிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர். தனது மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், இறுதி வரை தைரியமாக, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட ஷிஹான் ஹுசைனி மறைவு, இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு. அவரது உறவினர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read more:- பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி
உலக அளவில் புகழ்பெற்ற தற்காப்புக் கலைகள் பயிற்சியாளரும், வில்வித்தை பயிற்சியாளருமான திரு. ஷிஹான் ஹுசைனி அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்திய வில்வித்தை கழகத்தின் தேசியத் துணைத் தலைவராகச் சிறப்பாக பணியாற்றியவர். நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக… pic.twitter.com/Ex3rQyjYOr — K.Annamalai (@annamalai_k) March 25, 2025
What's Your Reaction?






