கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர்? மத்திய அரசு கொடுத்த ஷாக்
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க ஒரு நிரந்தர ஆசிரியர் கூட இல்லை என்று மத்திய அரசின் இணை கல்வித்துறை அமைச்சர் ஸ்ரீ ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளதாக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில், எதிர்கட்சிகள் உள்ளிட்ட சில பிற கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்தக் கூடாது என்றும், புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன? என்ற கேள்விக்கு மத்திய அரசு பூஜ்ஜியம் என பதிலளித்துள்ளதாக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழுக்கு பூஜ்ஜியம்.. இந்திக்கு 86 ?
எம்.பி. கனிமொழி, தமிழ்நாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயாவில் பணியாற்றும் தமிழ், இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய இணை கல்வித்துறை அமைச்சர் ஸ்ரீ ஜெயந்த் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், ஆனால், தமிழ்நாட்டி இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்”.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? என்றும், அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள்? அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதனைத்தொடர்ந்து, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திமுக எதிர்ப்பதாகவும்” தனது பதிவில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் “0”. ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய… pic.twitter.com/V1lXQ1Jrfa — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 24, 2025
What's Your Reaction?






