Shihan hussaini: ஷிஹான் ஹுசைனிக்கு ரத்த தானம் செய்ததே என் மகன் தான்- எஸ்.வி.சேகர் 

ஷிஹான் ஹுசைனிக்கு ரத்தம் தேவைப்படும்போது தனது மகன் அஸ்வின் ரத்தம் தானம் செய்தார் என்றும் அவரது இழப்பு என்பது பெரிய பாதிப்புபை ஏற்படுத்தி உள்ளது என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

Mar 25, 2025 - 10:47
Mar 25, 2025 - 11:04
 0
Shihan hussaini: ஷிஹான் ஹுசைனிக்கு ரத்த தானம் செய்ததே என் மகன் தான்- எஸ்.வி.சேகர் 
எஸ்.வி.சேகர்-ஷிஹான் ஹுசைனி

வில் வித்தை வீரரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி ரத்தப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையும் பெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 25) அதிகாலை 1:45 மணிக்கு ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதுரையை சொந்த ஊராக கொண்ட ஷிஹான் ஹுசைனியின் உடல் சென்னை, பெசன்ட் நகர், TAAT தலைமையகத்தில் இன்று மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அதன் பிறகு அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் எஸ்.வி.சேகர் அஞ்சலி

இந்நிலையில், ஷிஹான் ஹுசைனி உடலுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், “ஷிஹான் ஹுசைனி வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் எப்படி எதிர்கொள்வது? எப்படி வெற்றி பெற வேண்டும்? என கற்றுக் கொண்டவர். தியானத்தில் நல்ல ஈடுபாடு உள்ளவர்.  

கராத்தே மற்றும் வில்வித்தைக்காக அவருக்கு பல நாடுகளில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ரத்தம் தேவைப்படும்போது எனது மகன் அஸ்வின் ரத்தம் தானம் செய்தார். அவரது இழப்பு என்பது பெரிய பாதிப்புபை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow