கொன்று குவிக்கப்பட்ட 700 பாலஸ்தீனியர்கள்.. எகிப்து பரிந்துரையை ஏற்குமா இஸ்ரேல்?

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கிய நிலையில் இதுவரை 700 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Mar 25, 2025 - 09:17
Mar 25, 2025 - 09:45
 0
கொன்று குவிக்கப்பட்ட 700 பாலஸ்தீனியர்கள்.. எகிப்து பரிந்துரையை ஏற்குமா இஸ்ரேல்?
700 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில் 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பழிவாங்கும் நோக்கில் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

15 மாதங்களுக்கு மேலாக நீடித்த இஸ்ரேல்- காசா போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வந்தன. இதையடுத்து ஜனவரி 19-ஆம் தேதி இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

இதன்படி, இஸ்ரேலியர்கள் தங்கள் பிடியில் இருந்த சில பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தனர். மேலும், காசாவிற்கு மனிதாபிமான உதவிகளும் சென்றடைந்தது. 

மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்

ஏழு வார போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இஸ்ரேல், காசா மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 65 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியதிலிருந்து இதுவரை 700 பேரை கொன்று குவித்ததாக கூறப்படுகிறது. இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட 400 பேர் கொல்லப்பட்டதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற பரபரப்பான சூழலில் இஸ்ரேல்-காசா போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை எகிப்து வழங்கியுள்ளது.

அதன்படி, ஹமாஸ் ஒவ்வொரு வாரமும் ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் முதல் வாரத்திற்கு பிறகு  இஸ்ரேல் இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தை செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவும், ஹமாஸும் ஒப்புக் கொண்ட நிலையில் இஸ்ரேல் இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow