அரசியலில் மட்டுமல்ல.. கிரிக்கெட்டில் அடித்து ஆடும் பாஜக அண்ணாமலை

BJP Leader Annamalai Practicing Cricket : பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அரசியல் பரபரப்பு சற்றே ஒய்ந்த நிலையில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக கிரிக்கெட் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

Jul 20, 2024 - 16:04
Jul 20, 2024 - 16:08
 0
அரசியலில் மட்டுமல்ல.. கிரிக்கெட்டில் அடித்து ஆடும் பாஜக அண்ணாமலை
BJP Leader Annamalai Practicing Cricket

BJP Leader Annamalai Practicing Cricket : பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது அதிரடி அரசியலால் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அரசியலை அசால்ட்டாக கையாளும் அண்ணாமலை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக கிரிக்கெட் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 

தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு பரபரப்பு அரசியலை தொடங்கினார். இதனால் அவரது நடவடிக்கைகளால், கட்சியிலும் சரி அரசியலிலும் சரி புதிய பரபரப்பு ஏற்பட்டது. 

தனக்கென ஒரு வார் ரூம் வைத்து செயல்படுவதாக அண்ணாமலை மீது விமர்சனங்கள் எழுந்தன. மூத்த தலைவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டனர். அதிமுகவுடன் கூட்டணி சேருவதை திட்டமிட்டு அண்ணாமலை எதிர்க்கத் தொடங்கினார். இதனால் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து கடும் விமர்சனங்களை வைத்தார். அவர் நினைத்ததுபோல கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. 

அண்ணாமலையின் பாதயாத்திரை இந்திய அளவில் பேசப்பட்டது. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க வேண்டும் என்று 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பாதயாத்திரை சென்றார் அண்ணாமலை. போகும் இடங்களில் எல்லாம் பாஜகவிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. தனி கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் களமிறங்கியது பாஜக. 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்தது. 

அரசியல் பரபரப்பு சற்றே ஓய்ந்துள்ள நிலையில் மேற்படிப்பிற்காக லண்டன் செல்லப்போகிறார் அண்ணாமலை. அதற்கு பிரதமர் மோடியும் ஒப்புதல் அளித்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் கிரிக்கெட் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அண்ணாமலை.தனது பேட்டை நோக்கி வரும் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடுகிறார் அண்ணாமலை. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow