‘‘ஹீரோயினை தொடவே விடலை’’இயக்குனர் மீது ‘பிக்பாஸ்’ ராஜூ பகீர் புகார்!
‘‘உங்களை கவினுக்கு போட்டியாக நினைக்குறீங்களா’’ என்று கேட்கப்பட, ‘‘அய்யய்யோ அப்படி இல்லை. என் சொலியை முடிச்சிடாதீங்க. நான் பாட்டு ஒரு ஓரத்துல நடந்திட்டு இருக்கிறேன். எங்களுக்குள் போட்டி இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த ரேசில் இல்லை. அவர் நடிப்பை, உழைப்பை நான் கவனிச்சிட்டு இருக்கிறேன். என் வேலையை பார்க்கிறேன்’’ என்றார்.
பிக்பாஸ் 5 சீசன் வின்னரான ராஜூ ஹீரோவாக நடிக்கும் படம் ‘பன்பட்டர்ஜாம்’ ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘காலங்களில் வசந்தம்’என்ற படத்தை இயக்கியவர். இதில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா ஆகியோர் ஹீரோயின்கள். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்றனர்.சென்னையில் நடந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டுவிழாவில் இப்படியொரு தலைப்பு வெச்சு இருக்கீங்களே? படத்துல பன் யாரு? பட்டர், ஜாம் யாரு? என்ன அர்த்தத்துல இந்த தலைப்புனு கேள்வி கேட்கப்பட, பக்கத்தில் ஹீரோயின் ஆத்யா பிரசாத் இருந்ததால் கொஞ்சம் நெளிந்தார் ராஜூ.
பின்னர் அவர் ‘‘நானும் வேறொரு அர்தத்ததில்தான் இந்த படத்துக்கு ஓகே சொன்னனேன். ஆனால், இந்த இயக்குனர் ஹீரோயினை தொடவே விடலை. நான் ஒரு பக்கமும், ஹீரோயின் ஒரு பக்கமும் நடிச்சிட்டு இருந்தோம். நாம நினைப்பது இல்லைனு புரிந்துகொண்டேன். கதைப்படி, இயக்குனர்தான் பன். அது சரியாக இருந்தால் அனைத்தும் நல்லா இருக்கும். நான், ஹீரோயின், மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் ஆகியோர் பட்டர்,ஜாம்னு நினைச்சுக்கோங்க’’ என்றார்.
‘நீங்க இயக்குனராக ஆக விரும்புனீங்களே என்னாச்சு?’ என்று ராஜூவிடம் கேட்கப்பட, ‘‘பிக்பாஸ் வெற்றியாளராக வெளியே வந்தபோது மட்டுமல்ல, அதற்குமுன்பும் இயக்குனர் ஆக ட்ரை பண்ணினேன். முன்பு எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு கதை எழுதினேன். அடுத்து நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த
வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். நான் நடிக்க ஆசையில்தான் முதலில் ஊர்ல இருந்து வந்தேன். ஆனால், அது கிடைக்கவில்லை. நாமே நடிக்கலாம்னு நினைச்சு, கே.பாக்யராஜ், நெல்சனிடம் உதவியாளராக சேர்ந்தேன். அந்த இயக்குனர் ஆசை அப்படியே இருக்கிறது.
நம்மை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இப்ப நடிப்பில் கவனம் செலுத்துகிறேன். ஒருநாள் அந்த ஆசை நடக்கும்னு நம்புறேன்.பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது துரோகம் குறி்த்து பேசியிருக்கிறேன். நான் அனைவரும் துரோகத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால், இப்ப அந்த துரோகங்களை மறந்துவிட்டேன். பிக்பாஸ் வீட்டி்ல இருந்து வந்தபின்
மரியாதை கிடைக்கிறது. கதை சொல்ல வர்றாங்க. குறிப்பாக, என்னை சார்னு மதிச்சு பேசுறாங்க. என்றார்.
‘‘உங்களை கவினுக்கு போட்டியாக நினைக்குறீங்களா’’ என்று கேட்கப்பட, ‘‘அய்யய்யோ அப்படி இல்லை. என் சொலியை முடிச்சிடாதீங்க. நான் பாட்டு ஒரு ஓரத்துல நடந்திட்டு இருக்கிறேன். எங்களுக்குள் போட்டி இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த ரேசில் இல்லை. அவர் நடிப்பை, உழைப்பை நான் கவனிச்சிட்டு இருக்கிறேன். என் வேலையை பார்க்கிறேன்’’ என்றார்.
மேலும் ராஜூ பேசுகயைில் ‘‘இந்த நேரத்துல பிக்பாஸ் நிகழ்ச்சியை, அதில் ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சவர்களை மறக்க மாட்டேன். அவர்களுக்கு நன்றி.எந்த இடம் கிடைத்தாலும் வாழ்க்கையில சந்தோஷமாக இருக்கணும்னு நினைக்கிறேன். ஒரு காலத்துல எங்க ஆடிசன் நடக்கும் போது அதை கேட்டு தெரிந்து கொண்டு அங்கே ஆர்வமாக கலந்துகிடுவேன். அப்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஐடியா சொன்னாங்க. திரில்லர் பண்ணுங்க, அதை பண்ணுங்க, இதை பண்ணுங்கனு சொன்னாங்க. ஒரு கட்டத்துல நானே சில முயற்சி செய்தேன். அதுல பல காலம் ஓடிவிட்டது.
குழந்தை, பேமிலி, இளைஞர்கள் பிடிக்கிற மாதிரி படம் பண்ண வேண்டும் என்பார்கள். பன் பட்டர் ஜாம் படம் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அப்படிப்பட்ட கதை இது. இந்த படத்தோட பர்ஸ்ட் லுக் வித்தியாசமானது. இதை டிஜிட்டலில், அட்வான்ஸ் டெக்னாலாஜியை பயன்படுத்தலை. கேரளாவில் உள்ள எல்லோ டூத் என்ற நிறுவனம் இதை கைப்பட வரைந்து இருக்குது. சினிமா எழுத்தாளர்கள், சினிமா டெக்னீஷியன்கள், மீடியா, ரசிகர்கள் ஆகியோர் எழுதுவதுதான் என் தலையெழுத்து. என்று சென்டிமென்ட் ஆக முடித்தார்.
What's Your Reaction?