Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை.. மொட்டை கிருஷ்ணனுடன் என்ன தொடர்பு.. நெல்சனை விசாரிக்கும் போலீஸ்

Director Nelson Dilipkumar in Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் காவல்துறையினர் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் நெல்சனிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

Aug 24, 2024 - 12:15
Aug 24, 2024 - 14:16
 0
Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை.. மொட்டை கிருஷ்ணனுடன் என்ன தொடர்பு.. நெல்சனை விசாரிக்கும் போலீஸ்
Armstrong Murder Case Chennai Police Enquiry with Director Nelson Dilipkumar

Director Nelson Dilipkumar in Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி  பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும் இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல முன்னணி கட்சிகளின் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுன்ட்ரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவ்வாறு அடுத்தடுத்து விசாரணை வளையத்திர்குள் பலர் சிக்கி சிறையில் அடைக்கப்ப்ட்டுள்ளனர்.இந்நிலையில் அரசியல் கட்சியினர்கள் தொடர்ந்து சிக்கி வந்த இந்த வழக்கில் கோலிவுட் பிரபலங்கள் தற்போது விசாரனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பீஸ்ட், ஜெய்லர் திரைப்படங்களை இயக்கிய பிரபல தமிழ் இயக்குநர் நெல்சன் திலிப்குமாரின் மனைவி மோனிஷா ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மொட்டை கிருஷ்ணனுக்கு அவர் அடைக்கலம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தில் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அடுத்த கட்டமாக இயக்குனர் நெல்சனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.இந்த நிலையில், சம்மன் கொடுத்து அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்குச் சென்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.சுமார் 1 மணி நேரமாக இயக்குனர் நெல்சனிடம் விசாரணை நடைபெற்றது.

மொட்டை கிருஷ்ணனும் இயக்குனர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ச்சியாக இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் மொட்டை கிருஷ்ணன் செல்போன் தொடர்பு இருந்து வந்ததால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow