விஜய் கட்சி கொள்கை பரப்பு செயலாளரா? கீர்த்தி சுரேஷ் சொன்ன நச் பதில்!

நயன்தாரா இடத்தை பிடிக்க ஆசையா? லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஆசையா என்றால், சிறப்பான கதைகள், வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஆசை'' என்கிறார்.

Jul 21, 2024 - 14:05
Jul 22, 2024 - 10:33
 0
விஜய் கட்சி கொள்கை பரப்பு செயலாளரா? கீர்த்தி சுரேஷ் சொன்ன நச் பதில்!
keerthy suresh

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள ரகு தாத்தா படம், ஆகஸ்ட் 15 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது இந்திக்கு எதிரான படமா? டிரைலரை பார்த்தால் அப்படி தெரியுதே என்று கீர்த்தி சுரேஷிடம் கேட்டால் ''இது 1970களில் நடக்கும் கதை. பேங்க் பரீட்சைக்கு, இந்தி முக்கியம் என காலகட்டத்தில் நடக்கும் காமெடி கலந்த சுவாரஸ்மான திரைக்கதை.

என் தாத்தாவாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். நீங்க நினைக்கிற மாதிரி சீரிஸ் படமல்ல, சர்ச்சை உருவாக்கும் படமும் அல்ல. இது இந்தி திணிப்புக்கு எதிரான கதை. இந்தி எதிர்ப்பை சொல்வது அல்ல. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்ததால் இங்கே கதை களத்தில் நடக்கிறது. இந்தி திணிப்பு மட்டுமல்ல; பெண்கள் மீதான பல தடைகள், பிரச்னைகளை கலந்து பேசுகிறது'' என்று சிரிக்கிறார்.

இப்பதான் இந்தியில் ஒரு படத்தில் நடிக்கிறீர்கள். இந்த நேரத்தில் இப்படியொரு படமா என்று கீர்த்தியிடம் கேட்டால், ''ஆம், அட்லி தயாரிப்பில் காளீஸ் இயக்கத்தில் தெறி இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறேன். படத்தோட டைட்டில் பேபி ஜான். சமந்தா நடித்த கேரக்டரில் நான் வருகிறேன். வருண் தவாண் ஹீரோ. அது வேறு உலகம். டிசம்பரின் அந்த படம் ரிலீஸ்.

அதற்குள் ரகு தாத்தா வந்து விடும். படம் பார்த்தவர்கள், கருவை புரிந்து கொள்வார்கள், டிரைலர் வந்தபோது இப்படிப்பட்ட கேள்வி நிறைய வந்தது. நான் கேரளாவில் கேந்திரிய வித்யாலயாவில் படித்தேன். நல்லா இந்தி தெரியும், பேச, எழுத நல்லா வரும். நான் எந்த மொழிக்கும் எதிரி அல்ல'' என்கிறார்.

தொடர்ச்சியாக சீரியஸ் படங்களில் நடிக்கிறீர்களே என்று கீர்த்தியிடம் கேட்டால், ''மகா நடிக்கு பின், என் மீதான பார்வை மாறிவிட்டது. ஆனாலும் தெலுங்கில் தசரா மாதிரியான பக்கா கமர்சியல் படங்களும், சரக்குவாரி பாட்டா படமும், வந்ததே, மகா நடிக்கு பின் சரித்திர, பிரீயட் கதைகள் எனக்கு அதிகம் வருகின்றன'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ''இந்திக்கு போனால் சில தென்னிந்திய ஹீரோயின்கள் ஆளே மாறுவார்கள். ராஷ்மிகா கூட கவர்ச்சிக்கு மாறினார். கீர்த்திக்கு பக்கத்து வீட்டு பெண் இமேஜ். அங்கே எப்படி என்றால் நானும் மாற நினைக்கிறேன் ஆனால் எனக்கு என் லிமிட் தெரியும். பாலிவுட் தக்கபடி, கேரக்டர் தக்கப்படி மாற்றம் இருக்கும். ஆனால் என் இமேஜ் மாறாது. பேபி ஜான் என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும்'' என்று கூறினார்.

கீர்த்திக்கு திருமணம், துபாய் மாப்பிள்ளை என அடிக்கடி செய்திகள் வருகிறேதே என்று கேட்டபோது, ''நான் படிக்கிறேன், ரசிக்கிறேன். என் வாழ்க்கையிலும் ஒரு விஷயம் போய்க்கொண்டுதான் இருக்கிறது. அது என்ன என்பதை தக்க சமயத்தில் சொல்வேன்'' என்றார்.

ரகு தாத்தா தலைப்பு என்பதால் கேட்கிறோம். உங்களுக்கும், உங்க தாத்தாவுக்குமான பாசம் எப்படி?

''அம்மா வழி தாத்தா, அம்மா நடிக்கும்போதே இறந்துவிட்டார். அவருடன் எந்த பாச பிணைப்பும் இல்லை. ஆனால் அப்பா வழி தாத்தா கோபியுடன் நல்ல நினைவுகள் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் மறைந்தார். அவர் நினைவுகளை இந்த படப்பிடிப்பில் உணர்ந்தேன்'' என பீல் பண்ணுகிறார் கீர்த்தி சுரேஷ்.

நயன்தாரா இடத்தை பிடிக்க ஆசையா? லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஆசையா என்றால் ''அவங்க இப்பவும் சிறப்பா நடிச்சிட்டு இருக்காங்க. எனக்கு வேறொரு இடத்தை பிடிக்க ஆசை. சினிமாவுக்கு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் சிறப்பான கதைகள், வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஆசை'' என்கிறார்.

நீங்க அரசியலுக்கு வரப்போறீங்க, பிஜேபியில் சேரப்போறீங்களாமே என்றால், 'அப்படி எதுவும் இல்ல என்று மறுக்கிறார். சரி, விஜய் கட்சியில் சேரப்போறீங்கனு செய்திகள் ஓடுதே என்றால், ''இப்படி கேட்டால் என்ன சொல்ல. அரசியல் பத்தி இப்ப யோசிக்கலை. இப்ப ரகு தாத்தா வருது. அடுத்து ரிவால்வார் ரீட்டா, இந்தி படம் வருது. அடுத்த ஆண்டு தெலுங்கில் ஒரு படம், அக்கா என்ற வெப் சீரியஸ் வருது. வருங்காலத்தில் அரசியலில் சேரலாம், சேராமல் இருக்கலாம். இப்ப தெரியலை'' என்று சிரிக்கிறார்.

சரி, விஜயின் த.வெ.கவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டால், 'அது கொடுக்கணுமே. கொடுத்தால் பார்க்கலாம். இப்ப பட புரமோசன் வேலை நிறைய இருக்கிறது. விடை பெறுகிறேன்'' என்று எஸ்கேப் ஆகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow