Actor Vimal : தமிழக வெற்றிக்கழகம்.. நடிகர் விமல் சொன்ன ஒற்றை பதில்.. கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

Actor Vimal About Vijay Political Journey in Tiruchendur : நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விமல் கூறிய கருத்து விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

Aug 2, 2024 - 13:25
Aug 3, 2024 - 10:11
 0
Actor Vimal : தமிழக வெற்றிக்கழகம்..  நடிகர் விமல் சொன்ன ஒற்றை பதில்.. கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்
Actor Vimal About Vijay Political Journey in Tiruchendur

Actor Vimal About Vijay Political Journey in Tiruchendur : நடிகர் விமல், தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையின் போது நடிகர் விஜயுடன் கில்லி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் விஜய்யுடன் இருக்கும் அவரது நண்பர் குழுவில் ஒருவராக வந்திருக்கும் இவர் ஒரு சில இடங்களில் மட்டுமே டயலாக் பேசி இருக்கிறார். சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கில்லி படத்தில் நடித்த விமலுக்கும் இப்போது இருக்கும் விமலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

கில்லி படம் மட்டுமன்றி, விஜய்யுடன் வில்லு படத்திலும் நடித்திருக்கிறார் நடிகர் விமல். நடிகர் விமலுக்கு, சமீப ஆண்டுகளாக வெளியான படங்களில் பெரும்பாலானவை சறுக்கலைத்தான் கொடுத்திருக்கின்றன. ஒரு சில படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருந்தாலும் அவை பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இவர் நடித்திருந்த ‘விலங்கு’ வெப் தொடருக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனமும் வரவேற்பும் இருந்தது. நடிகர் விமல், தற்போது SIR என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள விஜய் அதற்கு முன்னோட்டமாக சேலத்தில் மாநாடு நடத்தப்போகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், சில நாட்களுக்கு முன்னர் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கும் விழாவை நடத்தினர். இதில், நடிகர் விமல் கலந்து கொண்டார். இதையடுத்து, இவர் விஜய்யின் அரசியல் கட்சியில் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கு நடிகர் விமல் விளக்கம் கொடுத்தார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விமல் கூறிய கருத்து விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. நடிகர் விமல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். தமிழ் சினிமாவில் சில காலங்களாக விமலின் புதிய திரைப்படங்கள் வரவில்லை. தற்போது அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். போகுமிடம் வெகு தூரம் இல்லை, தேசிங்குராஜா 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். 

இதில்  போகுமிடம் வெகு தூரம் இல்லை' எனும் படத்தின் படப்படிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வரும் நிலையில் தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் தான் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்து வெளியே வந்த விமலிடம் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர். 

அதன்பிறகு நடிகர் விமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம், நடிகர் தனுஷ் படம் எடுப்பதற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விமல், அது குறித்து எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரிகிறது என்றார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று அடுத்ததாக கேள்வி எழுப்பப்பட்டது. அதனை கேட்டவுடன் சிரித்த நடிகர் விமல், "தெரியலைங்க'' என பதிலளித்துவிட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதை அறியாமல் நடிகர் விமல் மாற்று கிரகத்தில் இருக்கிறாரா? என்று விஜய் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். மனுஷன் வேற கிரகத்துல இருக்குற மாறியே காட்டிப்பாரு. என்ன கேள்வி கேட்டாலும் தெரிலனு தான் பதில் சொல்லுவார் என்று கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow