Khatija Rahman : மகள் இசையமைத்த மின்மினி படம் ஏ.ஆர்.ரஹ்மான் கமென்ட் என்ன?

Minmini Tamil Movie Music Composer Khatija Rahman : ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மூத்த மகள் கதீஜா இசையமைத்த மின்மினி படம், இந்த வாரம் ரிலீஸ் ஆகிற நிலையில், படம் குறித்து , இசை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்துஎன்ன? ஹலிதா ஷமீம் இயக்கிய இந்த படத்தில் பிரவீன், கவுரவ், எஸ்தர் நடித்துள்ளனர்.

Aug 6, 2024 - 15:59
Aug 6, 2024 - 16:29
 0
Khatija Rahman : மகள் இசையமைத்த  மின்மினி  படம் ஏ.ஆர்.ரஹ்மான் கமென்ட் என்ன?
Minmini Tamil Movie Music Composer Khatija Rahman

Minmini Tamil Movie Music Composer Khatija Rahman : ஹலிதா ஷமீம் இயக்கத்தில் பிரவீன்கிஷோர், கவுரவ் காளை, எஸ்தர்  நடித்த படம் மின்மினி. ஊட்டியில் நடக்கும் பள்ளி மாணவர்கள் கதையை முதற்பாகமாகவும், இமயமலை பயணத்தை 2வது பாகமாகவும் வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் ஹலிதா. முதற்பாகத்தில் மாணவர்களாக நடித்த  பிரவீன், எஸ்தரை, 2வது பாகத்தில் வளர்ந்தவர்களாக காண்பித்துள்ளார். இதற்காக 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களையே மீண்டும் நடிக்க வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் இது புதுமை. படம் குறித்து இயக்குனரிடம் கே ட்டால்...

‘‘இப்படிப்பட்ட கதையை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். பொதுவாக, சினிமாவில்  சின்ன வயதில் ஒரு நடிகரையும், வளர்ந்தவுடன் அவர்களை காண்பிக் குக்கும்போது  வேறு நடிகரையும் நடிக்க வைப்பது வழக்கம். ஆனால், நாங்கள் சின்ன வயதில் நடித்தவர்களையே, 7 ஆண்டுகள் கழித்து நடிக்க வைத்தோம். அழகான நட்பை, பயணத்தை மென்மையாக சொல்கிறது கதை. பார்வையாளர்களுக்கு கிளர்ச்சியை உருவாக்க, வன்முறையை ஆதரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எத்தனையோ படங்களில் இமயமலையை பார்த்து இருப்பீர்கள். அங்கே பாடல்காட்சியை, சில சீன்களை எடுப்பது வழக்கம். ஆனால், மின்மினியில்(Minmini Movie) இமயமலையை ரொம்பவே விரிவாக, புதுசாக காண்பித்து இருக்கிறோம். இமயமலை மட்டுமல்ல, அங்கே உள்ள மக்கள், அவர்கள் வாழ்க்கையை காண்பித்து இருக்கிறோம். படத்தின் கதையும் இமயமலையை சுற்றி நடப்பதால், அதை அவ்வளவு அழகாக காண்பித்து இருக்கிறோம். கிளைமாக்ஸ் கூட அங்கேதான் நடக்கிறது. இமய மலை பகுதியில் எல்லா நாட்களும் படமாக்க முடியாது. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும். கிளைமேட், வாகனங்களை கொ்ண்டு செல்வது, சாப்பாடு என நிறைய சவால்களை சந்தித்தோம்’ என்கிறார்.

பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் இளை ய மகளாக நடித்த எஸ்தர் ஹீரோயின். அவர் பள்ளி மாணவி, இடை வேளை க்குபின் வளர்ந்தவர் என வருகிறார். பல சீன்களின் பைக் ஓட்டியுள்ளார். இது குறித்து இயக்குனரிடம் கேட்டால்,  ‘‘இடைவேளைக்குபின் பிரவீன், எஸ்தர்  பைக்கில் இமயமலையை சுற்றுவதுதான் கதை. அதற்காக, ஹீரோயின் எஸ்தர் அந்த 220 கிலோ பைக்கை ஓட்ட, கையாள கற்றுக்கொண்டார். அவர் துணிவை, தைரியத்தை பாராட்ட வேண்டும். இந்த படம் பலருக்கு பல்வேறு நினைவுகளை, உணர்வுகளை கொண்டு வரும். அதற்காகவே 7ஆண்டுகள்  காத்திருந்து 2ம் பாதியை எடுத்தோம். உலக  சினிமாவில் இப்படிப்பட்ட படங்கள் புதுசு. தமிழி்ல இப்படிப்பட்ட விஷயங்கள் வந்தது இல்லை. இந்த படம்(Minmini) பார்த்தால் பள்ளி பருவம், நட்பு மலரும் நினைவுகளாக வரும்.’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையி்ல் ‘‘இந்த படத்துக்கு மனோஜ்பரம்மஹம்சா ஒளிப்பதிவு, கதீஜா(Khatija Rahman Music) இசை பெரிய பலம். ஏ.ஆர்.ரஹ்மான்(AR Rahman Daughter) மகள்தான் கதீஜா. இதுவரை மகள் படத்தை அப்பா பார்க்கவில்லை. இந்த படம் சம்பந்தமாக பேசவில்லை.  நாளைக்குதான்  மகள் இசையமைத்த படத்தை ஏ.ஆர்.ரகுமான் பார்த்து ரசிக்கப்போகிறார்’’ என்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow