இந்தியாவில் களைகட்டும் IPhone 16 வியாபாரம்... மீன் வாங்கக் கூட இவ்வளவு கூட்டம் இருந்தது இல்லை!

இந்தியாவில் ஆப்பிள் iphone 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்றபடி காத்திருந்து iphone 16 போன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Sep 20, 2024 - 15:14
Sep 20, 2024 - 15:47
 0
இந்தியாவில் களைகட்டும் IPhone 16 வியாபாரம்... மீன் வாங்கக் கூட இவ்வளவு கூட்டம் இருந்தது இல்லை!
இந்தியாவில் களைகட்டும் IPhone 16 வியாபாரம்.

இந்தியாவில் ஆப்பிள் IPhone மோகம் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆப்பிள் மொபைல்களில் உள்ள டெக்னாலஜியைத் தாண்டி வெறும் கவுரவத்திற்காகவே இந்த IPhone வாங்கும் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மோகம் தற்போதைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. கண்ணாடி முன்பு நின்று IPhone வைத்திருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதற்காகவே செல்ஃபி எடுப்பது மற்றும் Mobile Case போட்டால் ஆப்பிள் லோகோ தெரியாமல் போய்விடுமோ என்று Mobile Back Case கூட போடாமல் சுற்றிக்கொண்டிருக்கும் நபர்கள் ஏராளம்.  

இப்படி இருக்கும் சூழலில் நடப்பாண்டிற்கான புதிய மாடலான iphone 16 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இன்று டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில்  iphone 16 விற்பனை களைகட்டியுள்ளது. அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்றபடி காத்திருந்து iphone 16 போன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மும்பையில் அமைந்திருக்கும் BKC-ல் உள்ள ஆப்பிள் ஸ்டோரிலும், டெல்லியில் உள்ள சாகேட்டிலும் iphone 16 போன்களை வாங்குவதற்காக ஆப்பிள் பிரியர்கள் அலைமோதும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியா, அமெரிக்கா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட 60 நாடுகளில் அறிமுகமாகியுள்ள இந்த போன், iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, and iPhone 16 Pro Max  ஆகிய நான்கு மாடல்களில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், மும்பையில் வரிசையில் காத்திருந்து 5 ஐபோன்களை  நபர் ஒருவர் வாங்கிச் சென்றுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வாங்கியதாக உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். இந்த காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நீண்ட நாட்களாகக் கூறப்பட்ட ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் அம்சம் இந்த மாடலில் (Apple Intellegence) இடம் பெற்றுள்ளது. சக்திவாய்ந்த, ஒருங்கிணைந்த, உள்ளுணர்வு கொண்ட, தனிப்பட்ட மற்றும் தனியுரிமை என ஐந்து மிக முக்கிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையின் கீழ் தரவுகளை எழுதுவது, பல்வேறு செயலிகளில் தரவுகளை மறு உருவாக்கம் செய்வது போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை..அவதூறு பரப்புவதா? 100 கோடி நஷ்ட ஈடு கேட்கும் செல்வ பெருந்தகை

இத்துடன் மெசேஜஸ், கீநோட், ஃபிரீஃபார்ம் மற்றும் பேஜஸ் போன்ற செயலிகளில் படங்களை உருவாக்கும் வசதி வழங்கப்படுகிறது. பயனர்கள் கிட்டத்தட்ட உண்மைக்கு நிகராக காட்சியளிக்கும் படங்களை பல்வேறு விதங்களில் உருவாக்க முடியும். இந்த படங்கள் பயனர்களின் கேலரியில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow