Lubber Pandhu Review: விஜயகாந்த் ரசிகர்கள் கொண்டாடும் லப்பர் பந்து... டிவிட்டர் விமர்சனம் இதோ!
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ள இந்தப் படத்தை, கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் லீடிங் ரோலில் நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. மினிமம் பட்ஜெட் மூவியான இது, இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. லப்பர் பந்து ட்ரைலர் வெளியான போதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. அதேபோல், சினிமா செய்தியாளர்களுக்கான திரையிடலிலும் லப்பர் பந்து படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இந்நிலையில், இன்று தமிழில் 6 படங்கள் வெளியான நிலையில், அதில் லப்பர் பந்து ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படம் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், “ட்ரைலர் கொடுத்த ஆர்வத்தை தக்க வைத்திருக்கிறார்கள். ஓரிரு குறைகளைத் தவிர, நிறைய தியேட்டர் மொமெண்ட்ஸை கொடுக்கப் போகும் படம். அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், தினேஷின் மனைவியாய் வரும் பெண் நடிப்பு அபாரம். கிரிக்கெட் கமெண்டரி கொடுக்கும் கதிரின் கமெண்டுகள் கவனிக்க வைக்கும்” என பாராட்டியுள்ளனர். “லப்பர் பந்து சூப்பர்யா, இதுதான்டா சினிமா. கிரிக்கெட் லவ்வர்ஸ், சினிமா லவ்வர்ஸ், கேப்டன் லவ்வர்ஸ், தளபதி லவ்வர்ஸ் எல்லாருக்கும் இந்தப் படம் செம ட்ரீட். அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பாராட்டுகள் எனவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
லப்பர் பந்து படத்துக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது சினிமா எக்ஸ்பிரஸ் தளம். ஆத்மார்த்தமான ஸ்போர்ட்ஸ் ஜானரில் உருவாகியுள்ள லப்பர் பந்து படத்தின் மேக்கிங் அருமையாக உள்ளது. படம் முழுக்க எல்லா எமோஷனலும் சரியாக பேலன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பார்க்கிங் படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு லப்பர் பந்து சூப்பர் ஹிட். ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து இதுபோன்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
லப்பர் பந்து படத்தை இயக்குநரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். “இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் லப்பர் பந்து, அனைத்து விதத்திலும் ஒரு மகத்தான மகிழ்ச்சியான ஒரு ஆரம்பம். இந்திய சினிமா மேலும் ஒரு திரைக்கதை ஆளுமையை பெற்றடுத்துக் கொண்ட நாள். உன் பொறுமை, அர்ப்பணிப்பு, உழைப்பு உனக்கு மகுடங்களை மட்டுமே பெற்றுத்தரும் வாழ்க” என பாராட்டி பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ்ஜும் லப்பர் பந்து படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
லப்பர் பந்து படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், இது செம ஃபன்னான மூவி என்றும், ஜாலியா, சூப்பரா எடுத்துருக்காங்க. அட்டகத்தி தினேஷ் ஆக்டிங் நன்றாக இருந்ததாகவும், ஹரிஷ் கல்யாண் – தினேஷ் இருவருக்கும் இடையேயான காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளதாக பாராட்டியுள்ளனர். அதேபோல், லப்பர் பந்து எக்ஸ்பர்ட் பண்ண முடியாத அளவுக்கு நன்றாக வந்துள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டர் வந்தோம், ஆனால் அதைவிட ரொம்பவே என்ஜாய் செய்தோம் என கருத்துத் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த மூவி, வாழ்க்கையையும் விளையாட்டாக எடுத்துவிடக் கூடாது என நல்ல மெசேஜ் கொடுத்துள்ளதாகவும் பாராட்டியுள்ளனர். ஒட்டுமொத்தமாக லப்பர் பந்து படத்துக்கு பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ளதால், இந்த வாரம் ரிலீஸில் வின்னர் இதுதான் என்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக லப்பர் பந்து படம் குறித்து பேசியிருந்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, ”விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்! இப்ப கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்த்னு பிரியப்படுகிற மாதிரி, லோகேஷ் கனகராஜ் கமல் சார் மேல தனிப்பட்ட பிரியம் காட்டுகிற மாதிரி, நான் விஜயகாந்துக்கு ஒரு படத்தை சமர்ப்பணமாகப் பண்ணணும்னு நினைச்சேன். இதில் தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகராக வருவார். படம் நெடுக கேப்டனோட ரெஃபரென்ஸ் இருக்கும். நாம் பார்த்த விஜயகாந்தை நம்ம படத்தில் கொண்டாடணும்னு நினைச்சேன். தினேஷ் வீடு முழுக்க விஜயகாந்த் படங்கள், பைக் ஸ்டிக்கர்ஸ், அவரது பாடல்கள் என ரொம்ப நிறைவாக அமைஞ்சிருக்கு. அவரோட நினைவுகளை 'லப்பர் பந்து' மீட்டெடுக்கும்! எனக் கூறியிருந்தார். அதேபோல் படம் முழுக்க விஜயகாந்தின் ரெஃபரன்ஸ் இருப்பதாகவும் கேப்டனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
What's Your Reaction?






