ஆம்ஸ்ட்ராங் கொலை..அவதூறு பரப்புவதா? 100 கோடி நஷ்ட ஈடு கேட்கும் செல்வ பெருந்தகை

செல்வப்பெருந்தகை குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி மீது காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Sep 20, 2024 - 15:00
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை..அவதூறு பரப்புவதா? 100 கோடி நஷ்ட ஈடு கேட்கும் செல்வ பெருந்தகை
selvapeunthagai 100 crore defamation case

அகில இந்திய காங்கிரஸ் தலைமை, செல்வப்பெருந்தகைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொறுப்பில் இருப்பவர்களுக்கு பொறாமை அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்  கூறியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகம் இருந்தால் அதை காவல் ஆணையரிடம் தெரிவித்திருக்க வேண்டும். எதற்காக கடிதம் எழுதி கட்சியின் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாகவும், கட்சி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை ராகுல் காந்திக்கு அனுப்பி இருந்தார். இந்த கடிதம் வெளியாகி அரசியல் கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவு தலைவர் சந்திரமோகன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் மீது  புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய சந்திரமோகன், "செல்வப்பெருந்தகை கொலையாளி என்றும் சொத்து ஆதாயத்துக்காக ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட் மற்றும் பிபிஜி சங்கர் ஆகியோரின் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்” என்றும் சட்டப்பூர்வமாக நிலையான ஆதாரங்கள் ஏதுமின்றி பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில்ல கூறப்பட்டுள்ளது. 

செல்வப்பெருந்தகை மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், முதல் தகவல் அறிக்கையில் எதிரியாகக் கூட காண்பிக்கப்படவில்லை.
பழிவாங்கும் நோக்கத்தோடும், அரசியல் லாபம் பெறும் நோக்கத்தோடும், சட்ட விதிகளுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் செல்வப்பெருந்தகையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

நாகேந்திரன் மற்றும் அஸ்வதாமன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் செல்வப்பெருந்தகையால் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை. மேலும், செல்வப்பெருந்தகையால் அவர்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதையும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவர்களது தொடர்பு தெரிந்தவுடன், அஸ்வத்தாமனை காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியவர் செல்வப்பெருந்தகைதான்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெயசங்கருக்கு எதிராக புகாரை அளித்துள்ளோம். புகாரின் மீது, சட்டத்தின்படி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பின்னணியி ஆருத்ரா பகுஜன் சமாஜ் கட்சி குரல் கொடுக்கவில்லை. ஏன் பகுஜன் சமாஜ் கட்சி மவுனமாக இருக்கிறது. எந்த தலைவர் தடுக்கிறார்? 

அகில இந்திய காங்கிரஸ் தலைமை, செல்வப்பெருந்தகைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொறுப்பில் இருப்பவர்களுக்கு பொறாமை அளிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகம் இருந்தால் அதை காவல் ஆணையரிடம் தெரிவித்திருக்க வேண்டும். எதற்காக கடிதம் எழுதி கட்சியின் தலைமைக்கு அனுப்ப வேண்டும். யாரோ பின்னால் இருந்து செயல்படுத்துகிறார்கள். பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பது குறித்து போலீசார் கண்டறிய வேண்டும். புகார் அளித்த ஜெய்சங்கர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 அஸ்வத்தாமன் செல்வபெருந்தகைக்கு நெருக்கமாக இருந்தார் என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கட்சியின் மாநில பொறுப்பில் உள்ள நபர்களின் அனைவரிடமும் தலைவர் நெருக்கமாக தான் இருப்பார் ஆனால் அவர்கள்  தவறு செய்யும் பட்சத்தில் அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய நற்பெயருக்கு  களங்கும் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  செல்வபெருந்தகை ஆன்லைன் மூலமாக காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளதாகவும் மேலும் அவதூறு பரப்பும் வகையில் பொய் புகார் அளித்த ஜெய்சங்கர் மீது 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர் உள்ளதாகவும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow