அடேங்கப்பா! ரூ.300 கோடி ஜெட் விமானம்..ரூ.40 கோடி பங்களா.. ஆனந்த் அம்பானிக்கு குவிந்த பரிசுகள்!
Anand Ambani Wedding Gifts Worth : அமிதாப்பச்சன் குடும்பத்தினர் ரூ.30 கோடி மதிப்புள்ள நெக்லஸை பரிசாக வழங்கியுள்ளார். சல்மான் கான் ரூ.15 கோடி மதிப்புள்ள உயர்தரமான பைக்கை ஆனந்த் அம்பானிக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

Anand Ambani Wedding Gifts Worth: ஆசியாவின் பணக்கார தொழில் அதிபர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் என பன்முக முகம் கொண்டவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகனான ஆனந்த் அம்பானியின் மிக ஆடம்பரமான திருமணம் உலகளவில் பெரிதாக பேசப்பட்டது. அதாவது ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழில் அதிபரான வீரேன் மெர்ச்செண்டின் மகள் ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் இடையே கடந்த 12ம் தேதி மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.
இந்த விழாவில் முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் அதிகாரி லிண்டி கேமரூன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரர் ஜான்சீனா, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மிக முக்கியமாக குடும்பத்துடன் கலந்து கொண்ட 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த், மணமகன் ஆனந்த் அம்பானியோடு இணைந்து, ஹிந்தி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டது சமூகவலைத்தளத்தில் வைரலானது. மேலும் பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கான் அவரது மனைவி அவரது மனைவி கௌரி கான் மற்றும் ரன்வீர் சிங், அமிதாப்பச்சன், சூர்யா, இயக்குநர் அட்லீ உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இது மட்டுமின்றி, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, இஷான் கிஷன் பிரக்யன் ஓஜா, முன்னாள் இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்த்தனே என விளையாட்டு பிரபலங்களும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தியா மட்டுமின்றி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவில் மொத்தம் ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை செலவு செய்ததாக தகவல் வெளியானது.
கோடி, கோடியாக பணத்தை இறைத்து திருமணம் செய்த ஆனந்த் அம்பானி தனது திருமண விழாவுக்கு வந்த ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்பட அனைத்து பிரபலங்களுக்கும் ரூ.2 கோடி மதிப்புடைய உயர்ரக வாட்ச்சுகளை பரிசளித்து அசத்தினார். இந்நிலையில், ஆனந்த் அம்பானி திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் பல கோடிகள் மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கியுள்ளது தற்போது உலகளவில் மீண்டும் பேசும்பொருளாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கான் பிரான்சில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களாவை அவர்களுக்கு பரிசளித்துள்ளார். அமிதாப்பச்சன் குடும்பத்தினர் ரூ.30 கோடி மதிப்புள்ள நெக்லஸை பரிசாக வழங்கியுள்ளார். சல்மான் கான் ரூ.15 கோடி மதிப்புள்ள உயர்தரமான பைக்கை ஆனந்த் அம்பானிக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
அக்சய் குமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க பேனாவையும், கத்ரீனா கைப் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்க செயினையும் பரிசளித்துள்ளனர். ரன்வீர் கபூர்-தீபிகா படுகோனே ரூ.20 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயல்ஸ் காரை பரிசாக வழங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் ரூ.300 கோடி மதிப்பில் பிரைவேட் ஜெட் விமானத்தை பரிசளித்துள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பில்கேட்ஸ் ரூ.180 கோடி மதிப்பில் மினி கப்பல் ஒன்றை பரிசளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
What's Your Reaction?






