இந்திரா காந்தியை விடுதலை செய்யக்கோரி விமானத்தையே கடத்திய காங்கிரசை சேர்ந்த உத்தரபிரதேசத்தின் முன்னாள் எம்.எல்.ஏ போலாநாத் பாண்டே உடல்நலக் குறைவால் காலமானார்.
Former Congress Leader Bholanath Pandey Died : 1978ம் ஆண்டில் இந்திரா காந்தியை விடுவிக்கப்கோரி பொம்மை துப்பாக்கியை காட்டி இந்திய ஏர்லைன்ஸை கடத்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் போலாநாத் பாண்டே தன்னுடைய 71வது வயதில் காலமானார். இவருடைய உடல் லக்னோவில் உள்ள அவரது இல்லதில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உத்தரபிரதேசத்தின் பைரியா பகுதியின் எம்.எல்.ஏ வாக இருந்தார்.
போலாநாத் பாண்டே அரசியலில் ஆற்றிய பணிகள் ஏராளம். 1978ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ்-ன் IC 410 என்ற விமானத்தை பொம்மை துப்பாக்கியின் முனையில் கடத்தினார் போலாநாத் பாண்டே. இவ்வாறு அவர் செய்ததற்கு, கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்ப்ட்டிருந்த இந்திரா காந்தியை விடுவிக்க வேண்டும் எனற கோரிக்கையை காரணமாக காட்டினார். இந்த கடத்தலை தனது நண்பரான தேவேந்திர பாண்டே உடன் சேர்ந்தே நிகழ்த்தினார். அந்த விமானத்தில் 132 பொதுமக்களும் எமர்ஜென்சி காலக்கட்டத்தின் 2 முன்னாள் அமைச்சர்களும் (ஏகே.சென் மற்றும் தரம் பிப் சின்ஹா) ஆகியோரும் இருந்தனர். தன்னுடைய அரசியல் வரலாற்றிலேயே இந்த நிகழ்வை வைத்தே அவரை பலரும் நினைவுக்கூருகின்றனர்.
விமானம் கடத்தப்பட்டது எப்படி?
கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ்-ன் IC 410 என்ற விமானம் டெல்லி சென்றடைய இருந்தது. டெல்லிக்கு சென்றடைய 15 நிமிடங்கள் மட்டுமே இருந்த வேளையில், விமானத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. விமானத்தில் இருந்த போலாநாத் பாண்டேவும், அவருடைய நண்பர் தேவேந்திர பாண்டேவும் தங்களுடைய இருக்கைகளில் இருந்து எழுந்து விமானத்தின் காக்பிட்டிற்குள் நுழைந்தனர்.
அங்கு சென்று விமானியை மிரட்டி, இந்த விமனம் கடத்தப்பட்டு விட்டதாகவும், டெல்லிக்கு செல்லாமல் பாட்னாவுக்கு செல்ல உள்ளதாகவும் அவர் மூலமாகவே பயணிகளுக்கு அறிவிக்க வைத்தனர். பாட்னவுக்கு செல்லவிருந்த விமானம் சிறிது நேரத்திலேயே ரூட் மறி வாரணாசிக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விமானி எம்.என்.பாட்டிவாலா தெரிவிக்கையில், போலாநாத் பாண்டேவும், அவருடைய நண்பர் தேவேந்திர பாண்டேவும் விமானத்தை முதலில் நேபாளுக்கு செலுத்த சொன்னதாகவும் பின்பு அவர்களே அதை மறுத்துவிட்டதாகவும், பிறகு பங்களாதேஷுக்கு செல்ல சொன்னதாகவும் பின்பு அவர்களே மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், விமானத்தில் இருந்த இண்டர்காமில் தாங்கள் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் என அவர்களே அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டதாகவும், இந்த கடத்தலில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாது என அவர்கள் உறுதியளித்தும் உள்ளனர்.
விமானத்தில் இருந்த போதே, இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் சஞ்சய் காந்தி மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படவேண்டும் என நிபந்தனை விதித்தார் போலாநாத் பாண்டே. மேலும் விமானத்திலேயே, இந்திரா சிந்தாபாத், சஞ்சய் சிந்தாபாத் போன்ற முழக்கங்களை எழுப்பி, பயணிகளையும் அதை சொல்லவைத்துள்ளனர்.
இந்த விமானம் வாரணாசியை அடைந்தவுடன், உத்தரபிரதேசத்தின் அப்போதைய முதலமைச்சரான ராம் நரேஷ் யாதவை போலாநாத் பாண்டேவும், தேவேந்திர பாண்டேவும் சந்தித்தனர். பல மணி நேர பேச்சுவாத்தைக்கு பிறகு, இந்திரா காந்தி விடுவிக்கப்படுவார் என்ற வாக்குறுதிக்கு பிறகே அப்போது நிலவிய பரபரப்பு குறைந்தது. இதனையடுத்து போலாநாத் பண்டேவும், தேவேந்திர பாண்டேவும் சரணடைந்தனர்.
மேலும் படிக்க: பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு.. எதிரொலிக்கும் அரோகரா முழக்கம்.. தயாராகும் அறுசுவை உணவுகள்
இதனையடுத்து, 1980ம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமரானதால், இவர்கள் மீதிருந்த வழக்குகள் தளர்த்தப்பட்டது. அதுமட்டுமல்லாது 1980ம் ஆண்டில் இவர்களுக்கு உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
இதன்பிறகு, இந்த சம்பவத்தை கடத்தல் இல்லை எனவும், இந்திரா காந்தியை விடுவிக்க வேண்டும் என தான் நடத்திய போராட்டம் எனவும் தெரிவித்திருந்தார் போலாநாத் பாண்டே.