"அந்த நடிகையை அழிக்க நினைச்சாங்க..” மலையாள சினிமாவில் வெடித்த புரட்சிக்கு இவர்தான் காரணமா..?
ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பிற்கு தற்போது மலையாள திரையுலகில் நடக்கும் புரட்சிக்கு அன்றே வித்திட்டவர் தான் பிரபல நடிகை ஒருவர் என உணர்சி பொங்க தன்னுடையை கருத்துகளை பகிருந்துள்ளார் எழுத்தாளர் சந்தீப் தாஸ்.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதனையடுத்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்பித்தது ஹேமா கமிட்டி.
அந்த அறிக்கையில் மலையாள திரை உலகத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பயம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. சூட்டிங் செல்லும் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோரை அல்லது உறவினர்களை உடன் அழைத்துச் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சூட்டிங் செல்லும் இடங்களில் நடிகர்கள் ஹோட்டல் அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வது உட்பட பல மோசமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளன. இவ்வளவு மோசமான நிலைமை இருந்தும் இதுகுறித்து பலரும் புகார் அளிப்பதில்லை. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாகவும், சமூகத்தில் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் காரணமாகவும் பாலியல் சுரண்டலில் ஈடுபவர்களுக்கு எதிராக பலரும் புகாரளிக்கத் தயங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கேரளா சினிமா துறையில் சில கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்காக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வலியுறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மலையாள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு சம ஊதியம் என்பது வழங்கப்படுவதில்லை. அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி கூட நடிகைகளுக்கு இல்லை. சூட்டிங்கின் போது பெண்கள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து விடுகிறார்களாம் என்றெல்லாம் கமிட்டி அளித்த அறிக்கையில் கூறப்பட்டது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பின், தங்களை பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கியவர்களுக்கு எதிராக மலையாள நடிகைகள் வெளிப்படியாக பேசுகின்றனர். இந்த சமயத்தில் பிரபல நடிகை ஒருவர் எதிர்கொண்ட தாக்குதல்களையும், அவரின் போராட்ட குணத்தையும் நினைகூர்ந்துள்ளார் எழுத்தாளர் சந்தீப் தாஸ்.
பிரபல தென்னிந்திய நடிகையான அவர் அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். 2017ம் ஆண்டு கேரளாவின் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு பயணம் செய்துகொண்டிருந்த போது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு பின்னால் கேரளாவில் பிரபலமான நடிகர் திலீப் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அந்த நடிகைக்கு நீதி கேட்டு பலரும் கொந்தளித்தனர். இந்த குற்றச்சாட்டை திலீப் மறுத்தாலும், அவரை போலீசார் கைது செய்தனர்.ஆனால் அவர் 3 மாதங்களுக்கு பின் பிணையில் வெளியானார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக சமர்பிக்கப்பட்ட மெமரி கார்டு நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஆனால், அந்த மெமரி கார்டு பலமுறை மாற்றப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் தன்னுடைய தனியுரிமை பாதுகாப்பாக இல்லை எனவும் அவர் சமூகவலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், நீதிமன்றத்தில் இதுபோன்ற தவறு நடந்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலமிழந்து போய்விடுவார்கள். ஆனால் நான் எனக்கான நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என கூறி இருந்தார்.
இதுபற்றி எழுத்தாளர் சந்தீப் தாஸ் கூறுகையில், ”அந்த நடிகையை மலையாள சினிமாவில் இருந்து ஒழிக்க வேண்டும் என ஒரு தரப்பு உறுதியாக இருந்தது. அவர்கள் அந்த நடிகை பின்வாங்குவார் என கனவு கண்டார்கள். ஆனால், இதையெல்லாம் எதிர்த்து போராட முடிவு செய்தார் அவர். இதனால் அந்த நடிகை மிகவும் கஷ்டப்பட்டார், பல படங்களில் நடிப்பதற்கான் வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து அவர் கொண்டுவந்த தீப்பொறிதான் தற்போது காட்டுத்தீயாக மாறியுள்ளது.
மேலும் படிக்க: மூட்டை தூக்கி படிக்கும் கோவில்பட்டி மாணவன்.. டிவியில் ஒளிபரப்பான நாளில் உடனே விஜய் செய்த உதவி
இரண்டு நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சுரண்டல்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளனர். இதில் இன்னும் பல தலைகள் உருளும். தங்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றி பேச பல நடிகைகளுக்கு தைரியம் கொடுத்தார் அந்த குறிப்பிட்ட நடிகை. அவர் காட்டிய பாதையில் தான் மற்ற பெண்கள் தற்போது நடக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
What's Your Reaction?






