துருவ் விக்ரமும் எனக்கு போட்டிதான்...மகன் குறித்து நடிகர் சீயான் விக்ரம் பேச்சு

கல்லூரியில் படிக்கும் போது நான் ரொம்ப நல்ல பையன். நான் சிறுவனாக இருக்கும் போது வாடகை வீடு தான், நான் சாதிக்க வேண்டும் என கனவு கண்டேன், சாதித்து விட்டேன் என விக்ரம் தெரிவித்தார்.

Mar 26, 2025 - 17:46
Mar 26, 2025 - 18:43
 0
துருவ் விக்ரமும் எனக்கு போட்டிதான்...மகன் குறித்து நடிகர் சீயான் விக்ரம் பேச்சு

கோவை, மலுமிச்சாம்பட்டி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘வீர தீர சூரன்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நடிகர் சியான் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றினர். மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன், நாளை மார்ச் 27 ம் தேதி திரையரங்குகளில் வீர தீர சூரன் படம் வெளியாகிறது. காளி, கலைவாணி ரொமான்ஸ்காக இந்த படத்தை பாருங்கள். காதலித்தால் மட்டும் போதாது பாதுகாக்க வேண்டும். 

கனவு கண்டேன் சாதித்து விட்டேன்

காதல் என்பது மிக முக்கியம். அவங்களுகாக கேர் பண்றது ரொம்ப முக்கியம், அதற்காக இந்த படத்தை பாருங்கள். சாமி படத்தில் பண்ணுன ரொமான்ஸ், இந்த சாமி கூட நான் பண்ணிட்டேன்..இது ஒரு ரொமான்டிக் படம் அதற்காக பாருங்கள்.இந்த படத்தின் ஸ்பெஷல், ஆரம்பமே வேற மாதிரி இருக்கும், இதுவரை நடித்த படத்தை விட இந்த படம் நன்றாக இருக்கும் என்றனர்.

Read more: பாசத்தில் பாட்டி செய்த செயல் - பேரனின் கொடூரத்தால் பறிபோன உயிர்

தொடர்ந்து பேசிய நடிகர் விக்ரம், கல்லூரியில் படிக்கும் போது நான் ரொம்ப நல்ல பையன். நான் சிறுவனாக இருக்கும் போது வாடகை வீடு தான், நான் சாதிக்க வேண்டும் என கனவு கண்டேன், சாதித்து விட்டேன் என்றார்.

துருவ் விக்ரமும் எனக்கு போட்டிதான்

இதைத்தொடர்ந்து பேசிய துஷாரா விஜயன், ஒரே வாழ்க்கை, எனக்கு ஒரே  ஒரு கனவு தான் இருந்தது, நடிகையாக ஆக வேண்டும் என ஆகிவிட்டேன். எனக்கு சிறுவயதில் கால் உடைந்து கட்டுடன் சென்று தேர்வு எழுதி முதல் ஆளாக வந்தேன் என்றார்.

Read more: தமிழ்நாடு முழுவதும் மார்ச் 29ல் திமுக ஆர்ப்பாட்டம்

பின்னர் நடிகர் துருவ் விக்ரம் எப்படி இருக்கார் என்ற கேள்விக்கு பதில் அளித்த விக்ரம், நடிகர் என்று சொன்னால் நான் பதில் சொல்ல மாட்டேன் அவர் எனக்கு போட்டி, என்னுடைய பையன் நன்றாக இருக்கான் என விக்ரம் தெரிவித்தார்.தொடர்ந்து விக்ரம் மற்றும் துஷாரா ஆகியோர் மாணவர்களுடன் செல்பி  எடுத்துக் கொண்டு நடனமாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow