TVK Vijay : மூட்டை தூக்கி படிக்கும் கோவில்பட்டி மாணவன்.. டிவியில் ஒளிபரப்பான நாளில் உடனே விஜய் செய்த உதவி

TVK Leader Vijay Helps Kovilpatti Boy : மூட்டை சுமந்து படிக்கு மாணவனுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. நீயா நானா நிகழ்ச்சியை பார்த்த அரை மணி நேரத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் செயலாளர் ஆனந்த் கோவில்பட்டியில் உள்ள சுரேஷ் சத்யாவிடம் சொல்லி, எங்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவி செய்துள்ளார்கள்.

Aug 26, 2024 - 12:24
Aug 26, 2024 - 14:14
 0
TVK Vijay : மூட்டை தூக்கி படிக்கும் கோவில்பட்டி மாணவன்.. டிவியில் ஒளிபரப்பான நாளில் உடனே விஜய் செய்த உதவி
vijay tv neeya naana

TVK Leader Vijay Helps Kovilpatti Boy : பல மாணவர்கள் வேலை செய்து கொண்டே படித்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலையே இதற்குக் காரணம். வறுமையான நிலையிலும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் மாணவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். கோவில்பட்டியைச் சேர்ந்த மாணவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய அதே நாளில் உதவிகள் தேடி வரத் தொடங்கியுள்ளன. இசையமைப்பாளர் தமன், தவெக தலைவர் விஜய் என பலரும் உயர் கல்விக்காக உதவி செய்யத் தொடங்கியுள்ளனர். 

விஜய் டிவியில் ஞாயிறு தோறும் பிற்பகல் நேரத்தில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சமூகத்தில் நடைபெறும் சம்பவங்களை வைத்து விவாதம் நடைபெறும். வாழை படத்தில் உழைக்கும் மாணவர்கள் பற்றி கூறப்பட்டிருப்பதால் உழைக்கும் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. இதில் மாணவர்கள் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா இருக்கிறது. பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நிறைய பேட்டிகளில் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் வாழை படம் வெளியாகி மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக வந்ததால், படித்துக்கொண்டே வேலைக்கு செல்லும் மாணவர்கள் Vs மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்கள். அதில் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு மாணவன், தான் பழக்கடையில் வேலை செய்வதால் மூட்டை தூக்கும் வேலைகள் செய்வேன் என்று கூறினார். மேலும், தான் தூக்கம் மூட்டைகள் 10 கிலோவுக்கு மேல் இருக்கும். அதனால், அவருக்கு தோள்பட்டை வலி இருந்து கொண்டே இருக்கும் என்று கூறியிருந்தார்.

காலை 5:30 மணியில் இருந்து பத்து மணி வரை வேலை செய்வதாகவும். அதற்குப் பிறகு, சில நேரங்களில் பஸ்ஸை விட்டு விட்டால் மூன்று கிலோ மீட்டர் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போவதாக கூறினார். அப்படி நடந்து போகும்போது, நல்லா படித்து நல்ல நிலைமைக்கு வந்து அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே போவேன் என்றார். அதனை தொடர்ந்து பேசிய சிறுவனின் தாய், முதலில் நானும் வேலைக்கு போயிட்டு இருந்தேன். இப்போ எலும்பு தேய்மான பிரச்சனைகள் இருப்பதால் போக முடியவில்லை என்று வருத்தத்தோடு கூறியிருந்தார்.

இந்த சிறுவனின் வீடியோ வைரலான நிலையில் பிரபல இசை அமைப்பாளர் தமன், இந்த சிறுவனுக்கு ஒரு இருசக்கர வாகனத்தை உதவியாக கொடுக்க விரும்புகிறேன். அது அந்த உதவியாக வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் அவங்க அம்மாவை போய் பார்க்க உதவும். அதனால் அந்த பையனின் விவரங்களை எனக்கு கிடைக்குமாறு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். எனவே கஷ்டத்தில் இருக்கும் சிறுவனுக்கு உதவ முன்வந்த இசையமைப்பாளர் தமனை அனைவரும் பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.

இதே போல  விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ உடனடியாக மாணவனின் குடும்பத்துக்கு உதவி செய்துள்ளது. அதை மாணவனின் தாய் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில், விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சிக்கு போயிருந்தோம். அதில் என் மகன் படும் கஷ்டங்களைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டான். நிகழ்ச்சியை பார்த்த அரை மணி நேரத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் செயலாளர் ஆனந்த் அண்ணன், கோவில்பட்டியில் உள்ள சுரேஷ் சத்யாவிடம் சொல்லி, எங்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவி செய்துள்ளார்கள்.

எனக்கு எலும்பு தேய்மானம் உள்ளதால் உடனடியாக மெத்தை மற்றும் வீட்டுக்கு தேவையான பலசரக்கு சாமான்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர். என் மகன் கல்லூரி படிப்புக்கு உதவுவதாக கூறியிருக்கிறார்கள். அதோடு எங்களது அக்கவுண்டில் ரூபாய் 25000 போட்டுள்ளனர். விஜய் அண்ணாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என் மகன் பேசியதை, விஜய் பார்ப்பார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவர் செய்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். ஏற்கனவே இசையமைப்பாளர் தமன், இந்தச் சிறுவனுக்கு இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுப்பதாக உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow