RB Udhayakumar : அண்ணாமலைக்கு பதவி வெறி.. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார்.. ஆர்.பி.உதயகுமார் காட்டம்

RB Udhayakumar About Annamalai : பதவி வெறி மற்றும் பதவி மோகத்தினால், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Aug 26, 2024 - 14:21
Aug 26, 2024 - 14:34
 0
RB Udhayakumar : அண்ணாமலைக்கு பதவி வெறி.. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார்.. ஆர்.பி.உதயகுமார் காட்டம்
ஆர்.பி.உதயகுமார் மற்றும் அண்ணாமலை

RB Udhayakumar About Annamalai : மதுரை சமயநல்லூர் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக சார்பில் சிறப்பு ஆராதணை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “அதிமுக சமூக நீதிக்காக 69 சதவீத இட ஒதுக்கீடு வாங்கித் தந்தது. அதிமுகவின் வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை இன்றைக்கு மன அழுத்தத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டது போல் நேற்றைய பொது கூட்டத்தில் பேசியிருக்கிறார். அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவர் சந்தித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

சித்தம் கலங்கியவர்கள் பேசுவது அவர்களுக்கு என்ன பேசுகிறோம் என்பது தெரியாது., மற்றவர்களுக்கும் புரியாது அவர்களின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் இருக்காது. பதவி வெறி மற்றும் பதவி மோகத்தினால், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார்.

எந்த உழைப்பும் இல்லாமல் ஒரு சொட்டு வேர்வை சிந்தாத அண்ணாமலை பதவி வெறியில், சித்தம் கலங்கி உள்ளார். அண்ணாமலை மனநல மருத்துவர் அணுக வேண்டும், அப்படி இல்லை என்றால் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம், எங்களை அணுகுங்கள். உங்களுக்கு மதுரையில் நல்ல மருத்துவரை ஆலோசனைக்கு அனுப்புகிறோம்.

அக்டோபஸ் அட்டைப்பூச்சியின் நஞ்சுக்கு மருந்து கிடையாது.? அதுபோல அண்ணாமலை தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை.! இனிமேலும் செய்யப் போவதில்லை.! ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு உளறுகிறார் அண்ணாமலை.? தமிழக பாஜக தலைவராக வந்த அண்ணாமலை அவிழ்த்துவிட்ட கட்டுக் கதைகள் தமிழக மக்களுக்கு சாத்தியமில்லை என தெரிய வந்துள்ளது.

தனது முதல்வர் கனவு பறிபோயிடும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை உளறி வருகிறார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அம்மாவின் இல்லத்திற்கு தேடி வந்தவர் மோடி., ஒரு இணக்கமான உறவை வைத்து தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கினார். ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிச்சாமி 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கினார்.

தமிழகத்திற்கு எந்த வளர்ச்சியும் பெற்றுத்தந்திடாத பைத்தியக்கார ஆட்டோபஸ் அண்ணாமலை மக்களுக்கு எந்த திட்டமும், வளர்ச்சியும் பெற்று தந்திட மாட்டார். தான் சார்ந்த கட்சியை பின்னுக்குத் தள்ளி அனைத்து கட்சிகளையும் அளிப்பேன், ஒழிப்பேன் என ருத்ர தாண்டவம் ஆடும் அண்ணாமலை.? தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு உங்களால் என்ன செய்ய முடியும்.? என கேள்வி எழுப்பினர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெய்வத்திற்கு நிகரானவர்.! அண்ணாமலை கழுதையாக கத்தினாலும் தமிழக மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..! உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. அளிப்பேன் ஒழிப்பேன் என்ற அரசியல் பேச்சை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை கேட்டதில்லை.! பகல் கனவு காண்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.! நீங்கள் பகல் கனவில் முதல்வராகவும், பிரதமராகவோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியாக மாறுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow