Ex Minister Jayakaumar : விட்டில் பூச்சி அண்ணாமலை.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.. ஜெயக்குமார்

ADMK Ex Minister Jayakaumar Attacks BJP Leader Annamalai : அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார். அண்ணாமலை அழிவை நோக்கிச் செல்கிறார் என்பது அவரது பேச்சில் இருந்தே தெளிவாக தெரிகிறது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Aug 27, 2024 - 13:01
Aug 27, 2024 - 13:51
 0
Ex Minister Jayakaumar : விட்டில் பூச்சி அண்ணாமலை.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது..  ஜெயக்குமார்
ADMK Ex Minister Jayakaumar Attacks BJP Leader Annamalai

ADMK Ex Minister Jayakaumar Attacks BJP Leader Annamalai : அண்ணாமலை ஒரு விட்டில்பூச்சி.அண்ணாமலை ஒரு கம்பெனியின் மேலாளர். அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுகவைத் தொட்டுப் பார்த்தால் கெட்டுப் போவீர்கள் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அண்ணாமலையால் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பாஜவிற்கு என்றுமே பகல் கனவுதான். 2026 சட்டசபைத் தேர்தலில் பாஜக கோட்டை பக்கமே வர முடியாத நிலைதான் தற்போது உள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு பின்னர் அதிமுக - பாஜக கூட்டணி உருவானது. சட்டசபை தேர்தலிலும் கூட்டணியாக போட்டியிட்டனர் மறைந்த முதலமைச்சர்களான அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பற்றிய அண்ணாமலையின் கருத்து காரணமாக அதிமுகவினர் கொந்தளித்தனர்.

இதையடுத்து, பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. பின்னர், எடப்பாடி பழனிசாமி மீதும் அண்ணாமலையும், அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமியும் சரமாரியாக விமர்சனங்களை செய்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை சிறுபிள்ளைத் தனமாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தன்னைப் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று அண்ணாமலை விமர்சித்தார். இதனையடுத்து அண்ணாமலைக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். 

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுகவினர் பல இடங்களில் அண்ணாமலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்ணாமலைக்கு எதிராக மதுரையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக அதிமுகவினர் இடையே வார்த்தைப் போர் மீண்டும் முற்றியுள்ள நிலையில்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

"அண்ணாமலை கடந்த 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார். அண்ணாமலை விரக்தியில் அதிமுகவிற்கு எதிராக பேசி வருகிறார். அண்ணாமலை ஒரு விட்டில்பூச்சி.  அ.தி.மு.க. ஒரு மேலாளர். அண்ணாமலை ஒரு கம்பெனியின் மேலாளர். அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அ.தி.மு.க.வைத் தொட்டுப் பார்த்தால் கெட்டுப் போவீர்கள்.

எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அண்ணாமலையால் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பா.ஜ.க.வுக்கு என்றுமே பகல் கனவுதான். அண்ணாமலை அழிவை நோக்கிச் செல்கிறார் என்பது அவரது பேச்சில் இருந்தே தெளிவாக தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கோட்டை பக்கமே வர முடியாத நிலைதான் தற்போது உள்ளது என்று கூறியுள்ளார். அண்ணாமலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் அளித்தள்ளனர். 

வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பலமுனை போட்டி ஏற்பட உள்ளது. அதிமுக, திமுக போன்ற பங்காளி கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அண்ணாமலை திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். அதே போல பாஜக உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சூழ்நிலையில் அதிமுக பாஜக இடையே வார்த்தைப் போர் அதிகரித்து வருவது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow