Actor Vijay : The G.O.A.T பிரஸ்மீட்..விஜய் வருவாரா?

Actor Vijay in The Goat Movie Promotions : 'தி கோட்’ திரைப்பட ப்ரோமொஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Aug 27, 2024 - 18:28
Aug 27, 2024 - 19:29
 0
Actor Vijay : The G.O.A.T பிரஸ்மீட்..விஜய் வருவாரா?
Actor Vijay in The Goat Movie Promotions

தி கோட்’ திரைப்பட ப்ரோமொஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Actor Vijay in The Goat Movie Promotions : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யை வைத்தி தி கோட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த்-ஐ நடிக்கவைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் ஒன்று இளமயான தோற்றம் என்பதால் டீ ஏஜிங் டெக்னிக்கை பயன்படுத்தி அவரை இளமையாக காட்டியுள்ளனர்.

இது சினிமா ரசிகர்கள் மத்தியில் ட்ரோலாக மாறியது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து படமானது செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணியளவில் கேரளா, பெங்களூர், துபாய், அமெரிக்காவில் வெளியாகிறது. 

இப்படம் சென்சார் போர்டால் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தி கோட் திரைப்படம் பான் இந்தியா படம் என்பதால் பொன்னியின் செல்வன், தங்கலான் போன்ற திரைப்படங்களை போல தி கோட் திரைப்படத்திற்கு இந்தியா முழுவதிலும் ப்ரோமொஷன் பணிகள் நடைபெறவுள்ளது. படக்குழுவினர் அனைவரும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ப்ரோமொஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

முன்பெல்லாம், தளபதி விஜய் படம் என்றால், டிரெய்லர் மற்றும் இடை வெளியீட்டு விழா நடைபெறும். அதில் பங்கேற்று குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் நடிகர் விஜய். ஆனால், தன்னுடைய அரசியல் பணிகளுக்காக இதையெல்லாம் தற்போது தவிர்த்துக்கொண்டார் நடிகர் விஜய். அந்த வகையில் தி கோட் திரைப்படத்திற்கும் பாடல் வெளியீட்டு விழா நடக்கவில்லை. இதனால் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க: ’பேசுறதே சரியில்ல.. ஆக்‌ஷன் எடுங்க..’ அண்ணாமலை மீது பரபரப்பு புகார்..

இந்நிலையில் GOAT படக்குழுவினர் அனைவரும் பங்கேற்கும் பிரம்மாண்ட பிரஸ்மீட், சென்னையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 29) நடக்கிறது. இந்த ப்ரோமோஷன் பணிகளை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். இதனால், இந்த ப்ரோமொஷன் நிகழ்ச்சிகளிலாவது நடிகர் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow