விஜய் சேதுபதியை உதைத்தால் ரூ.1001 பரிசு.! அர்ஜூன் சம்பத்திற்கு அபராதம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திற்கு 4ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Aug 9, 2024 - 08:27
 0
விஜய் சேதுபதியை உதைத்தால் ரூ.1001 பரிசு.! அர்ஜூன் சம்பத்திற்கு அபராதம் எவ்வளவு தெரியுமா?
vijay sethupathi vs arjun sampath

கோவை: நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்தது தொடர்பான வழக்கில் கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது அர்ஜுன் சம்பத் தனது குற்றத்தை ஒப்பு கொண்டார். இதன் காரணமாக இப்போது அவருக்கு ரூ. 4000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2021ஆம் ஆண்டு பெங்களூர் விமான நிலையில் தனது உதவியாளரோடு சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடந்து சென்ற விஜய் சேதுபதியை அந்த நபர் பின்னால் வந்து எட்டி உதைத்தார். 

இந்தச் சம்பவத்தின் வீடியோ அப்போதே வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து இருதரப்பும் சமாதானம் செய்து கொண்டதாகவும் புகாரை வாபஸ் பெற்றதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே திடீரென விஜய் சேதுபதியின் உதவியாளரை உதைத்த அந்த நபர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் விஜய் சேதுபதி இந்தியாவையும் முத்துராமலிங்க தேவரையும் விமர்சித்தார் என்றும் இதன் காரணமாகவே உதைத்தேன் என்று கூறிய புதிய சர்ச்சையை கிளப்பினார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

இதனால் மீண்டும் சர்ச்சை உருவானது.  நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ. 1001 வழங்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பதிவிட்டிருந்தார். மேலும் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி தரப்புக்கும் அவரை தாக்க முயன்ற நபருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காவல்துறை வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விளக்கம் தரப்பட்டது. 

இந்தநிலையில் விஜய் சேதுபதியை தாக்கினால் பரிசு வழங்கப்படும் என அறிவித்த அர்ஜூன் சம்பத் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அர்ஜூன் சம்பத்திற்கு 4000ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow