மலையாள நடிகைகள் பாலியல் புகார்.. "அம்மா” சரியில்லை.. நடிகர் பிரித்விராஜ் குமுறல்

மலையாள திரை உலகில் நடிகர்கள் இயக்குனர்கள் நடிகைகளை பாலியல் இச்சைக்காக பயன்படுத்திக் கொண்டதும், மறுத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி வைத்ததும் இந்திய திரை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Aug 27, 2024 - 17:17
 0
மலையாள நடிகைகள் பாலியல் புகார்..  "அம்மா” சரியில்லை..  நடிகர் பிரித்விராஜ்  குமுறல்
actor prithiviraj sukumaran

மலையாள திரையுலகில் நடிகர் அளித்த பாலியல் தொல்லை புகார் தொடர்பாக முன்னணி நடிகர்கள் இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை. குறிப்பாக மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பலர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் முதன்முறையாக கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்கள் கொண்ட பிரித்விராஜ் சுகுமாரன்.


கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர் ஒருவரே ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு தற்போது வரை நடந்து வருகிறது. சமீபத்தில் கூட இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு பிறகு மலையாள திரையுலகில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடிகைகள், நடிகர்கள் இயக்குனர்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது, மறுத்தவர்கள் திரை உலகில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக பகீர் புகார் எழுழந்தது. 

இதை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் நடிகைகளும் இடம் பெற்று இருந்தனர்.
இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை ஐந்தாண்டுகளுக்கு முன்னரே தாக்கல் செய்தது. ஆனால் தற்போது தான் அது வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையில் மலையாளத் திரை உலகை சில இயக்குனர்கள் நடிகர்கள் முடிசூடா மன்னர்கள் போல ஆண்டு வந்ததும், நடிகைகள் பெண் தொழில்நுட்ப கலைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரிய வந்தது. 

இந்த அறிக்கை வெளிவந்ததிலிருந்தே பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணி இருக்கிறது. தொடர்ந்து மலையாள சினிமாவில் ஜாம்பவான்களாக பார்க்கப்பட்டு வரும் நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் குவிகிறது. இதை அடுத்து மலையாள நடிகர் சங்கமான அம்மா கூட்டம் கூட்டப்பட்டு நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் மோகன்லால். 

இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக நடிகர்கள் இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை. குறிப்பாக மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பலர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லைஆனால் இந்த விவகாரத்தில் முதன்முறையாக கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்கள் கொண்ட பிரித்விராஜ் சுகுமாரன். 

இது தொடர்பாக பேசி இருக்கும் அவர்," நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் சங்கமான அம்மாவிடமிருந்து (Association of Malayalam Movie Artists) வலுவான தலையீடு மற்றும் நடவடிக்கைகள் வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நிச்சயமான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் யாராவது தவறாக புகார்களை கூறியிருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஹேமா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து மிக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக எனக்கு எந்தவித அதிர்ச்சியும் இல்லை. அந்த கமிட்டி உருவாக குரல் கொடுத்தவர்களின் நானும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத் திரையுலகில் செல்வாக்கு மிகுந்த குழுவினர் இருப்பதாக கூறுகிறார்கள். அந்த குழுவிடமிருந்து இதுவரை நான் எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் அப்படி ஒரு பிரச்சினையே இல்லை என்றும் கூறி விட முடியாது. அந்த பிரச்சனையை நான் அனுபவிக்கவில்லை அவ்வளவுதான்.

மலையாள சினிமாவில் யாரேனும் இப்படிப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களது குறைகளை நிச்சயம் நாம் கேட்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களிடம் நிச்சயம் குறை குறைகளை கேட்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும். திரைப்படம் எடுத்து ரிலீஸ் செய்து விட்டால் மட்டும் எனது பிரச்சினை எனது பொறுப்பு முடிந்து விட்டது என நினைக்க மாட்டேன். ஒட்டுமொத்த மலையாள திரைத்துறையிலும் அனைவருக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்" எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow