நடிகைகள் விபச்சாரிகளா? இழிவாக பேசிய டாக்டர் காந்தராஜ்.. கொந்தளித்த நடிகை ரோகிணி

தமிழ் நடிகைகள் குறித்து இழிவாக பேசிய டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ரோகிணி புகார் அளித்துள்ளார்.

Sep 13, 2024 - 10:40
 0
நடிகைகள் விபச்சாரிகளா? இழிவாக பேசிய டாக்டர் காந்தராஜ்.. கொந்தளித்த நடிகை ரோகிணி
actress rohini complains that dr kandaraj

தனியார் யூடியூப் சேனலில்   சினிமாவில் விபச்சாரி நடிகைகள் பட்டியலை வெளியிட்ட டாக்டர் காந்தராஜ்" என்ற தலைப்பில்  பொதுமக்கள் பார்வைக்கு பதிவேற்றியுள்ளனர்.  அந்த பேட்டியில் பேசியுள்ள காந்தராஜ்  நடிகைகளை ஒட்டு மொத்தமாக கீழ்தரமாக பேசியதோடு, அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளி  என்பது போல பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.

ரேகா கமிட்டி அறிக்கை மலையாள திரை உலகத்தை கலகலக்க வைத்துள்ளது. தமிழகம், கன்னடம், தெலுங்கு திரை உலகத்திலும் இது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. திரை உலகத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் கலாச்சாரம் குறித்து பல யூடியூப் சேனல்களில் பலரும் பேசி வருகின்றனர். சினிமாவில் இருக்கும் அட்ஜென்ட்மெண்ட் குறித்து டாக்டர் காந்தராஜ் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியிருந்தார். அதில், சினிமாத்துறையில் விபச்சாரம் என்பது ஒரு சைட் தொழில், பல நேரத்தில் தவறான பெண்களே சினிமாவில் இருந்தார்கள். 

ஒரு நடிகையின் நடிப்பை யார் பார்த்தா, ஒரு நடிகை என்று வரும் போதே கவர்ச்சிதான் தேவைப்படுகிறது. படத்தில் உடம்பை காட்டுவது தான். அவர்கள் எவ்வளவு நாள் பிரபலமாக, இளமையாக இருக்கிறார்களோ அதற்குள் வருமானத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். நடிகையாக வருபவர்கள் கற்போடு இருப்பது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. 

நடிகை சினிமாவில் அறிமுகம் ஆகும் போது, ஒரு மேக்கப் மேனிடம் அனுப்புவார்கள், அந்த மேக்கப் மேன், உடம்பு முழுக்க பார்த்தால் தான் உனக்கு எந்த உடை செட் ஆகும் என்று சொல்லுவேன் என்று சொல்வார். ஏன் என்றால் மேக்கப் மேனிடம் கேட்டு விட்டுத்தான், காஸ்ட்டியூம் டிசைனர் எந்த உடை ஏற்ற உடை என்று முடிவு செய்வார். இதனால் நடிகைகள் முதலில் பலிகடா ஆவது மேக்கப் மேனிடம் தான் என்று கூறியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் விசாகா கமிட்டியின் குழு தலைவராக உள்ள  நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கடந்த 7.9.2024 தனியார் யூடியூப் சேனலில்   சினிமாவில் விபச்சாரி நடிகைகள் பட்டியலை வெளியிட்ட டாக்டர் காந்தராஜ்" என்ற தலைப்பில்  பொதுமக்கள் பார்வைக்கு பதிவேற்றியுள்ளனர்.  பேட்டியில் பேசியுள்ள காந்தராஜ் அவர்கள் நடிகைகளை ஒட்டு மொத்தமாக கீழ்தரமாக பேசியதோடு, அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளி  என்பது போல பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.  

சினிமாத்துறை சார்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் உள்ளது. அவர் மறைந்த நடிகைகள் முதல் தற்போது உள்ள நடிகைகள் வரை அவர்களது வாழ்க்கை, நடத்தை என தனக்கு சம்மந்தம்மில்லாத, எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேட்டியளித்ததோடு, அதன் மூலமாக நடிகைகள் என்றாலே சினிமாவில் கேமராமேன், எடிட்டர், மேக்கப்மேன், டைரக்டர் என விருப்பப்படுகின்ற அனைவரிடமும் "Adjustment" என்ற பெயரில் செய்து தான் நடிக்க வாய்ப்பு பெறுகிறார்கள் என்பது போல டாக்டர் காந்தராஜ் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது.

மேடை நாகரீகமோ அல்லது சமூக பொறுப்போ இல்லாமல் தனக்கு தோன்றியவற்றை எல்லாம் பேசி, அதில் அலங்காரத்திற்காக நாக்கூசும்
வார்த்தைகளையும் வசனங்களையும் பேட்டி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பெண்களை அதிலும் சினிமாத்துறை
சார்ந்த ஒட்டு மொத்த பெண்களையும் ஏளனமாகவும்  சித்தரித்துள்ளது குற்ற செயலாகும்.

சினிமாத்துறை சார்ந்த பெண்களின் மீது எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி இழிவாக பேசி, சமூக வலைதளத்தில் பதிவு செய்த யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தமைக்கு டாக்டர் காந்தராஜ் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட பேட்டியை YOUTUBE - ல் இருந்து நீக்க உடனடியாக உத்தரவிட வேண்டும்" என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow