திரிஷாவை ஓரம் கட்டிய நயன்தாரா. ஆர்.ஜே.பாலாஜிக்கும் செம ஆப்பு
Mookuthi Amman Part 2 : மூக்குத்தி அம்மன் பார்ட் 2வில் நயன்தாரா நடிக்கிறார். திரிஷாவை அதில் நடிக்க வைக்க முயற்சித்த ஆர்.ஜே.பாலாஜி இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கம்
Mookuthi Amman Part 2 : மூக்குத்தி அம்மன் பார்ட் 2வில் நயன்தாரா நடிக்கிறார். அதில் திரிஷா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குனர் பொறுப்பில் இருந்து ஆர்.ஜே.பாலாஜியும் நீக்கம் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் 2020ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் மூக்குத்திஅம்மன். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில், ஐசரி.கே.கணேஷ் தயாரித்தார். இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடிக்க, ஆர்.ஜே.பாலாஜி கதை நாயகனாக வந்தார். ஊர்வசி, மவுலி, ஸ்மிருதிவெங்கட், அஜய்கோஷ் உட்பட பலர் நடித்தனர். எல்.ஆர்.ஈஸ்வரி, இந்துஜா ஆகியோருக்கு கவுரவ வேடம். தமிழ்சினிமாவில் அம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயா, பத்மினி, மீனா, ரம்யாகிருஷ்ணன், ரோஜா போன்றவர்கள் நடித்த நிலையில், நயன்தாரா அம்மனாக நடித்தது பேசப்பட்டது. படத்தின் காட்சிகளும், காமெடியும், சொல்லப்பட்ட விஷயமும் வொர்க் அவுட் ஆக, படம் வெற்றி பெற்றது. வெற்றி விழா கூட நடத்தப்பட்டது.
படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், பல பேட்டிகளில் மூக்குத்தி அம்மன் பார்ட் 2 வருமா என்று ஆர்.ஜே.பாலாஜியிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவரோ கதை கிடைத்தால், சூழ்நிலை செட்டானால் அது நடக்கும் என்றார். படம் வெளியான சமயத்தில் அவருக்கும் நயன்தாராவுக்கும் பிரச்னை, ஈகோ சண்டை. அதனால், பார்ட்2 வர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்குமுன்பு மூக்குத்தி அம்மன் பார்ட் 2 வரப்போகிறது. நயன்தாரா நடிக்கவில்லை. திரிஷா நடிக்கப்போகிறார் என்று செய்திகள் கசிந்தன. இது குறித்து திரிஷா தரப்பிடம் கேட்டால், அதை நாங்க சொல்லக்கூடாது. ஆர்.ஜே.பாலாஜிதான் அறிவிக்கணும் என்று ஒதுங்கினர்.
ஆர்.ஜே.பாலாஜியும் அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. ஆனால், மறுக்கவில்லை. சிங்கப்பூர்சலுான் ஓடாத நிலையில் மூக்குத்திஅம்மன் 2வை ஆர்.ஜே.பாலாஜி கையில் எடுத்து இ ருக்கிறார். முதற்பாகத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக, நயன்தாராவுக்கு பதில், திரிஷாவை அம்மன் ஆக்கப்போகிறார். இதுவரை திரிஷா எந்த படத்திலும் அம்மனாக நடித்தது இல்லை என்பதால், படத்துக்கு உருவாகும் முன்பே வரவேற்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வேல்ஸ் நிறுவனம் சார்பில் மூக்குத்திஅம்மன் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் நயன்தாராவே மீண்டும் மூக்குத்திஅம்மனாக நடிக்கிறார் என்று போட்டோ வெளியானது. அந்த போஸ்டரில் தேடிப்பார்த்தாலும் ஆர்.ஜே.பாலாஜி பெயர் இல்லை. இதனால், கோலிவுட்டில் பல கேள்விகள் உருவாகி உள்ளது. நயன்தாரா தனது பவரை பயன்படுத்தி மீண்டும் மூக்குத்திஅம்மனாக நடிக்க பாலிடிக்ஸ் செய்தாரா? தனது செல்வாக்கால் ஆர்.ஜே.பாலாஜி, திரிஷாவை ஓரம் கட்டினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னமும் இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படாததால், இயக்குனர் யார் என்ற சஸ்பென்சும் உருவாகி உள்ளது. ஒருவேளை விரைவி்ல ஆர்.பாலாஜி பெயர் அறிவிக்கப்படுமா? அல்லது வேறு யாராவது இயக்குவார்களா என்ற கேள்விக்கும் விடை இல்லை.
மூக்குத்திஅம்மன் கதை என்பது ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் கற்பனையில் உருவான கதை. முதலில் அம்மனாக நடிக்க அருந்ததி, பாகுபலியில் கலக்கிய அனுஷ்காவிடம் பேசப்பட்டது. அவர் மறுக்க, ஸ்ருதிஹாசனிடம் கதை சொல்லப்பட்டது. கடைசியில் நயன்தாரா வந்தார். இன்றைக்கு நயன்தாரா சினிமா வாழ்க்கையில் மூக்குத்திஅம்மன் முக்கியமான படம். அதில் திரிஷா நடிப்பதை அவர் விரும்பவில்லை. அதனால், அவரே நடிக்கிறார். திரிஷாவை நடிக்க வைக்க ஆசைப்பட்ட, ஆர்.ஜே.பாலாஜியை இயக்குனர் பொறுப்பில் இருந்தே துாக்கிவிட்டார். இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து த யாரிக்கிறது. அதனால், நயன்தாரா டாமினேஷன் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. நயன்தாராவுக்கும் இப்போது பெரிய வெற்றி தேவைப்படுவதால், மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். இதற்கு ஆர்.ஜே.பாலாஜி என்ன சொல்லப்போகிறார். அவர் பதிலடி எப்படி இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
What's Your Reaction?