’விஜய் மாமாவ ரொம்ப பிடிக்கும்’... விஜய் கொடுத்த கட்டிப்புடி வைத்தியம்... துள்ளி குதித்த சிறுவன்!
"கேரளாவுல விஜய் சார் என் பையனை கட்டிபுடிச்சதும் அவன் ரொம்போ சந்தோஷமாயிட்டான்.. அதுக்கப்பறம் அவர டி.வியில பாத்தாலே துள்ளுவான்" என பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நடிகர் விஜய்யை பார்க்க கேரளாவிலிருந்து சென்னை வந்த குடும்பம் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம், கடந்த வாரம் 5ம் தேதி வெளியானது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலீஸான கோட் படத்துக்கு, முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. தமிழ்நாட்டில் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் ரிலீஸானது கோட்.
அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 700க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் கோட் படத்தை ரிலீஸ் செய்தனர். கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியான முதல் திரைப்படம் என்ற பெருமையும் கோட்டுக்கு கிடைத்தது. இந்நிலையில், முதல் வாரத்தின் முடிவில் கோட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் (Goat Movie Box Office Collection) நிலவரத்தை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏஜிஎஸ் தயாரிப்பில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது கோட். துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் கோட் படப்பிடிப்பை நடத்தினார் வெங்கட் பிரபு. அதேபோல், கிராஃபிக்ஸ் பணிகளுக்காகவும் பல கோடிகளை செலவு செய்தது தயாரிப்பு நிறுவனம். இன்னொரு பக்கம் விஜய் மட்டுமின்றி மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, சினேகா, லைலா, அஜ்மல் என பெரும் நட்சத்திரக் கூட்டணியே இப்படத்தில் நடித்திருந்தது.
படம் ரிலீசாகி 5 நாள் ஆகியும் ரசிகர்களிடையே கோட் ஃபீவர் இன்னும் தணிந்த பாடில்லை. இந்நிலையில் பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நடிகர் விஜய்யை பார்க்க ஒரு குடும்பம் கேரளாவிலிருந்து சென்னை வந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அக்குடும்பத்தினர், “எனது மகன் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விஜய் சார் என்றால் மிகவும் பிடிக்கும். ‘மாஸ்டர்’ படத்திலிருந்து விஜய் சாருக்கு எனது மகன் தீவிர ரசிகர் ஆகிவிட்டார். அதிலும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு துள்ளி குதித்து நடனமாடியது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. அன்றிலிருந்து விஜய் மாமா என்று தான் என் மகன் சொல்வார். டிவியில் விஜய் பாட்டு வந்தாலே எங்கிருந்தாலும் வந்துவிடுவார்” என உற்சாகமாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சிறுவனின் தந்தை, “கோட் படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடந்துகொண்டிருந்தபோது விஜய் சாரை பார்க்க எனது மகனை அழைத்து சென்றிருந்தோம். அப்போது அங்கு விஜய் சாரை கண்டதும் வீல் சேரிலிருந்து துள்ளி எழுந்து அவரைக் கட்டி அணைத்துக்கொண்டான். அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. இந்த காணொளி இணையத்தில் எதிர்பாராதவிதமாக வைரலாகிவிட்டது. தற்போது விஜய் சாரை நேரில் மீண்டும் பார்ப்பதற்கு கேரளாவில் இருந்து எங்களது மகனுக்காக வந்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?