Devara Trailer: ஜூனியர் NTR-ன் தேவாரா ட்ரைலர் ரிலீஸ் தேதி... ஜான்வி கபூர் தரிசனத்துக்கு ரெடியா..?
ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவாரா படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை: தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்திக்குப் பின்னர், இயக்குநர் கொரட்டலா சிவாவுடன் இணைந்தார் ஜூனியர் என்டிஆர். அதன்படி இக்கூட்டணியில் உருவாகும் தேவாரா படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஹீரோயினாக ஜான்வி கபூரும் வில்லனாக பாலிவுட் நடிகர் சயிப் அலிகானும் நடித்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர் வெற்றிக்குப் பின்னர் பான் இந்தியா ஹீரோவாகிவிட்டார் ஜூனியர் என்டிஆர். இதனால் தேவாரா படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
தேவாரா வரும் 27ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 10ம் தேதி தேவாரா ட்ரைலர் ரிலீஸாகிறது. முன்னதாக இப்படத்தில் இருந்து அனிருத் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகிவிட்டன. இதில் இரண்டாவதாக வெளியான ‘சுத்தமல்லே’ பாடலில் ஜான்வி கபூரின் கவர்ச்சியான ஆட்டம் ரசிகர்களை கிறங்க வைத்தது. தேவாரா திரைப்படம் மூலம் பாலிவுட்டில் இருந்து முதன்முறையாக தென்னிந்திய சினிமா பக்கம் என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஜான்வி கபூர்.
இதனால் தேவாரா படத்தில் ஜான்வியின் கிளாமர் கொண்டாட டோலிவுட் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். ஜான்வி கபூரின் அம்மா ஸ்ரீதேவி கோலிவுட், டோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்தவர். அதனால் ஜான்வி கபூரும் அம்மாவை போல பான் இந்தியா அளவில் மார்க்கெட்டை பிடிக்க ரெடியாகி வருகிறார். சுத்தமல்லே வரிசையில் அடுத்து வெளியான ‘தாவுதி’ பாடலிலும் கிளாமரில் ரசிகர்களை சொக்க வைத்திருந்தார் ஜான்வி கபூர்.
தேவாரா வெளியான பின்னர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ஜூனியர் என்டிஆர். இதுகுறித்து அபிஸியல் அப்டேட் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், சீக்கிரமே படப்பிடிப்பு தொடங்கும் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் ஏகே 64 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால் அஜித் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டு ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் மீண்டும் இணைந்தார் பிரசாந்த் நீல். இந்நிலையில், செப் 27ம் தேதி வெளியாகும் தேவாரா, பக்கா ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க - வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்
மேலும் இது முதல் பாகம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேவாரா முதல் பாகத்துக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை வைத்து இரண்டாம் பாகத்தின் அப்டேட்டை அறிவிக்க உள்ளதாம் படக்குழு.
What's Your Reaction?