Vettaiyan: “மனசிலாயோ மக்களே..” வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பராக்... ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர் ரஜினி கேமியோவாக நடித்த லால் சலாம், எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இதனால் வேட்டையன் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் மரண தண்டனைக்கு எதிராக போராடும் ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளதாராம் ரஜினி.
இந்நிலையில், வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனால், அதே தேதியில் வெளியாகவிருந்த சூர்யாவின் கங்குவா ரிலீஸ் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கார்த்தியின் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவே வெளிப்படையாக பேசியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் வெளியாகும் போது கங்குவா ரிலீஸானால் நன்றாக இருக்காது. அதனால் வேட்டையன் சிங்கிளாக ரிலீஸாகட்டும் என சைலண்டாக ஒதுங்கிவிட்டார் சூர்யா.
இதனையடுத்து வேட்டையன் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. வேட்டையன் இசை வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதனிடையே தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 9ம் தேதி வெளியாகிறது. ’மனசிலாயோ’ என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இது ரஜினியின் இன்ட்ரோ பாடலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க - இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்
ஜெயிலர் படத்தில் ரஜினி ரசிகர்களுக்கு வைப் கொடுத்த அனிருத், வேட்டையன் பாடல்களிலும் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னர் வெளியான விஜய்யின் கோட் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கவில்லை. விஜய்க்கு பெஸ்ட் காம்போ அனிருத் தான் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். அதேநேரம் கமல் – ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படத்தில், அனிருத்தின் இசை ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது.
இதனால் வேட்டையன் படத்தின் பாடல்கள், பின்னணி இசை மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தியன் 2ம் பாகத்தில் சொதப்பியதை போல வேட்டையன் படத்தின் இசையில் அனிருத் ஏதும் சம்பவம் செய்துவிடக் கூடாது என, ரஜினி ரசிகர்கள் மரண பீதியில் உள்ளனர். ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல் வேட்டையன் பட பாடல்களும் பின்னணி இசையும் தலைவருக்கு தரமான சம்பவமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்டையன் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?