This Week OTT Release: கோட் படத்துக்கு டிக்கெட் கிடைக்கலையா..? இதோ இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
விஜய் நடித்துள்ள கோட் இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகி மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத ரசிகர்களுக்காக செப்.6ம் தேதி, அதாவது இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள், வெப் சீரிஸ்கள் பற்றிய அப்டேட்டை இப்போது பார்க்கலாம்.
சென்னை: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிங்கிளாக ரிலீஸான கோட், பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. அதேநேரம் கோட் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள், ஓடிடி தளங்களில் ஐக்கியமாகிவிட்டனர். ஆனால், ஓடிடியில் இந்த வாரம் தமிழ்ப் படங்கள் பெரியளவில் வெளியாகவில்லை. ஒரே ஆறுதலாக நகுல் ஹீரோவாக நடித்துள்ள வாஸ்கோடகாமா திரைப்படம் அமேசன் ப்ரைம், ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அதேபோல், மலையாளத்தில் அடிகோ அமிகோஸ் (Adigo Amigos) திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியானது. நஹாஸ் நாசர் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான அடிகோ அமிகோஸ் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆசிப் அலி, செளபின் சாஹிர், சுராஜ் வெஞ்சராமூடு உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படம், காமெடி ஜானரில் உருவாகியிருந்தது. இந்நிலையில், அடிகோ அமிகோஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மேலும், பவி கேர் டேக்கர் (Pavi Care Taker) மனோரமா மேக்ஸிலும், பகவான் தஸந்தே ராமராஜ்யம் (Bhagavan Dasante Ramarajyam) அமேசான் ப்ரைமிலும் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் பொத்தினேனி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்த டபுள் ஐ ஸ்மார்ட் (Double iSmart) அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. சிம்பா (Simbaa), சத்யா (Satya), நிந்தா (Nindha) ஆகிய படங்கள் ஆஹா ஓடிடியில் வெளியாகின்றன. அதேபோல், கில் (Kill) என்ற இந்தி திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் தளத்திலும், தனவ் எஸ்2 (Tanaav S2) சோனி லிவ் ஓடிடியிலும் வெளியாகியுள்ளன. விஸ்ஃபோட் (Visfot) ஜியோ சினிமாவிலும், Call Me Bae என்ற வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் தளத்திலும் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
மேலும் படிக்க - விஜய்யின் கோட் பாக்ஸ் ஆபிஸ் அபிஸியல் அப்டேட்
நெட்பிளிக்ஸ் ரசிகர்களுக்கு, Bad Boys Ride Or Die, Rebel Bridge, Colors of Evil Red, Apollo Thirteen Survival, Disco Ibiza Locomia போன்ற ஆங்கில, ஸ்பானிஷ் மொழி படங்கள் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. அமேசான் ப்ரைம் தளத்தில் Agent Recon, House Keeping, The Well ஆகிய படங்கள் ஸ்ட்ரீமிங் ஆகின்றன.
What's Your Reaction?